Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/'மிஸ்டுகால்' மாதவன்

'மிஸ்டுகால்' மாதவன்

'மிஸ்டுகால்' மாதவன்

'மிஸ்டுகால்' மாதவன்

ADDED : ஏப் 01, 2018 04:37 PM


Google News
Latest Tamil News
அப்பாவி மாதவனுக்கு வைரக்கல் ஒன்று கிடைத்தது. அது வைரம் என்பதை கூட அறியாத அவன், விற்கும் எண்ணத்துடன் கடைத்தெருவுக்கு வந்தான்.

அவனை பார்த்த வியாபாரி ஒருவன், ஏமாற்ற முடிவு செய்தான்.

''இந்த கல்லை என்னிடம் கொடு. நான் உனக்கு இரண்டாயிரம் தருகிறேன்'' என்றான் ஆனால் மாதவனோ, ''இன்னும் ஐநுாறு ரூபாய் சேர்த்து தந்தால் தருகிறேன்'' என்றான்.

அதை கொடுக்க விரும்பாத வியாபாரி பேரம் பேச ஆரம்பித்தான்.

இதை கவனித்த மற்றொரு வியாபாரி, '' நான் தருகிறேன்'' என்று சொல்லி இரண்டாயிரத்து ஐநுாறு ரூபாய் கொடுத்து, வைரத்தை வாங்கினான்.

ஆத்திரமடைந்த முதல் வியாபாரி, ''அட முட்டாளே! உன்னிடம் இருந்தது சாதாரண கல் அல்ல; வைரம். அதன் மதிப்பு தெரியாமல் சொற்ப விலைக்கு விற்று விட்டாயே!” என திட்டினான்.

அதற்கு மாதவன், '' கல்லின் மதிப்பு எனக்கு தெரியாததால், தேவைப்பட்ட தொகைக்கு விற்று விட்டேன். அது வைரம் என்று தெரிந்தும் தவற விட்ட நீ தான் முட்டாள். வாய்ப்பு என்பது போன் செய்து கூப்பிடும் என கருதுவது தவறு. சில நேரம் அது 'மிஸ்டுகால்' கூட கொடுக்கும். அதை நாம் தான் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று சொல்லி விட்டு புறப்பட்டான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us