Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பசி போக்கிய பரமன்

பசி போக்கிய பரமன்

பசி போக்கிய பரமன்

பசி போக்கிய பரமன்

ADDED : மே 12, 2023 04:40 PM


Google News
Latest Tamil News
சிவனும் விஷ்ணுவும் ஒருவரே. வேறு வேறானவர்கள் அல்ல என்பதை உணர்ந்த மகான்கள் பலர். அவர்களுள், கும்பகோணம் திருவிசநல்லுார் ஸ்ரீதரஐயாவாள் முக்கியமானவர். இவரது முன்னோர் மைசூரு அரண்மனையில் பணி செய்தவர்கள். அங்கிருந்த வீடு, நிலன்களை தானமளித்து விட்டு இங்கு குடியேறியவர்கள். தந்தையின் தர்ப்பண நாளில் வீட்டுக்கிணற்றில் கங்கையை வரவழைத்து அற்புதம் நிகழ்த்தியவர். இப்போதும் கார்த்திகை மாதம் அமாவாசையன்று அந்த அதிசயம் நிகழ்வதை காணலாம்.

இவர் தினந்தோறும் திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்பிறகே உணவு அருந்துவார். ஒரு நாள் சூறாவளியுடன் பெய்த மழையால் கோயிலுக்கு போக முடியாத அளவிற்கு வழியெங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சிவபெருமானை இன்று தரிசிக்க முடிய வில்லையே என்ற வருத்தத்தில் வீட்டுத்திண்ணையில் படுத்து உறங்கிவிட்டார்.

நள்ளிரவில் கோயில் அர்ச்சகர் வந்து ஸ்ரீதரா... ஸ்ரீதரா... என அழைத்து சுவாமி பிரசாதம் பெறாமல் இருக்க மாட்டாயே இந்தா பிரசாதம் என்றார் அர்ச்சகர். அவரை தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று இருவரும் சாப்பிட்டனர். குளிரில் நடுங்கும் அவருக்கு கம்பளி ஒன்றை கொடுத்து போர்த்தி விட்டு உறங்கச் செய்தார். மறுநாள் கோயிலுக்கு சென்ற ஸ்ரீதரஐயாவாள் ஏன் சொல்லாமல் எழுந்து வந்தீர்கள் என அர்ச்சகரிடம் கேட்டார், நான் எப்போது உம்முடைய வீட்டிற்கு வந்தேன் நேற்றிரவு பெய்தபெருமழையில் நான் எங்குமே செல்ல வில்லையே என பதில் சொன்னார் அர்ச்சகர்.

அப்படியானால்அர்ச்சகர் வடிவில் வந்து நேற்றிரவு என் பசியை போக்கியது திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமியே என்பதை உணர்ந்தார் ஸ்ரீதரஐயாவாள். சிவபெருமானின் கருணையை நினைத்து கண்ணீர் மல்க மீண்டும் அவரை வணங்க சன்னதிக்கு சென்றார்.

ஏற தேறும் இடைமருது ஈசனார்

கூறு வார்வினை தீர்க்கும் குழகனார்

ஆறு செஞ்சடை வைத்த அழகனார்

ஊறி ஊறிஉருகும் என் உள்ளமே

திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமியை பயன் தெரியாமல் ஒருவர் வழிபாடு செய்வாரேயானால் அவர் செய்த பஞ்சமா பாதகங்கள் அகலும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us