Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நினைத்தாலே போதும்!

நினைத்தாலே போதும்!

நினைத்தாலே போதும்!

நினைத்தாலே போதும்!

ADDED : நவ 25, 2016 09:33 AM


Google News
Latest Tamil News
காஞ்சி பெரியவர் ஒரு சமயம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அவரைப் பார்க்க விவசாயப்பணி செய்யும் பெண்மணி கால்கடுக்க நின்றாள். பெரியவரின் தரிசனமும் கிடைத்து விட்டது. அவரை நோக்கி கை கூப்பினாள். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

'என்ன வேலை பண்றே?' என்றார் பெரியவர்.

'வயல் வேலைக்குப் போறேன் சாமி. ஆறு பசங்க... மாமியாரும் என் பொறுப்பிலே இருக்கு. காலையில் சோறாக்கி வெச்சுட்டுப் போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு வருவேன். கோவிலுக்கெல்லாம் போக நேரமிருக்காது. அது மட்டுமல்ல...உடம்பும் களைச்சுப் போவுது,' என்று பய பக்தியுடன் கூறினாள் பெரியவரின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.

'சாமி கும்பிடணும்னு நினைக்கிறயே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்.!. காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனைப் பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வெச்சவுடனே மேற்கு திக்கு பார்த்து ஒரு கும்பிடு போடு. கடமையைத் தொடர்ந்து செய்வதால் நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போதும். சூரியனைக் கும்பிடு சகல புண்ணியமும் கிடைச்சுடும்,'' என்றார்.

அந்தப் பெண்மணி ஆனந்தத்தில் கண்களை துடைத்துக் கொண்டாள்.

அவளுக்கு பழங்களை கொடுக்கச் சொன்னார் பெரியவர்.

- ஜெ.ஆர்.வி. ரமணி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us