Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பசைபடாமல் பலாப்பழம் சாப்பிடலாமா?

பசைபடாமல் பலாப்பழம் சாப்பிடலாமா?

பசைபடாமல் பலாப்பழம் சாப்பிடலாமா?

பசைபடாமல் பலாப்பழம் சாப்பிடலாமா?

ADDED : நவ 13, 2016 12:29 PM


Google News
Latest Tamil News
ஒரு மீசைக்காரருக்கு மரத்தில் தொங்கிய பலாப்பழத்தை பறித்து சாப்பிட ஆசை. 'சாப்பிட்டால் அதிலுள்ள பசை மீசையிலும், கையிலும் ஒட்டுமே!' என யோசித்தவர் கொஞ்சம் நல்லெண்ணெய் தடவிக் கொண்டார். அதேநேரம், கையில் எண்ணெய் பசையுடன் ஏறினால் வழுக்குமே என்ற யோசனை

வரவில்லை.

கிளையில் தொற்றிக் கொண்டு ஏறினார். கை வழுக்கவே தவறி விழுந்து அலறினார். சப்தம் கேட்டு, தோட்டத்திற்குள் வேலை செய்து கொண்டிருந்த ஒரு வேலைக்காரர், “பலாப்பழம் வேண்டுமானால் என்னிடம் சொல்லிஇருக்க வேண்டியது தானே. நானே பறித்து தந்திருப்பேனே,” என்றார்.

இந்தப் போக்கு தான் ஆன்மிகத்தில் நீடிக்கிறது. ஆன்மிகம் என்பது பிசுபிசுப்பான பலாப்பழம் போல! அதை அவ்வளவு எளிதில் பறிக்கவோ, சாப்பிடவோ முடியாது. பறித்தால் முள் குத்தும், பிரித்தால் பசை ஒட்டுவது போல ஒட்டும். பலாவை முள் குத்தாமல் பறித்து, பசை ஒட்டாமல் சாப்பிட வேண்டுமானால் தோட்டப் பணியாளரின் உதவி தேவை. அதுபோல், ஆன்மிகத்தை பக்குவமாக உணர ஒரு குருவின் உதவி தேவை. குரு என்றால் ஏதோ

தாடி மீசை வைத்துக் கொண்டிருப்பவர் என்பதல்ல. ஆன்மிகம் பற்றி அறிந்தவர்களுடன் சங்கமித்தாலே போதும்.

அது முடியாவிட்டால் ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம், சிவபுராணம், விஷ்ணுபுராணம் போன்ற நல்ல நூல்களைப் படிக்க வேண்டும். இப்படி

படிப்படியாக ஆன்மிகத்தில் காலெடுத்து வைக்கும் போது, அது தானாகவே நம்மிடம் ஒட்டிக்கொள்ளும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us