மூகாசுரன் வதம்
சிவபெருமானை வேண்டி தவமிருந்த கவுமாசுரன், “தன்னை எதிர்ப்பவர்கள் சரணடைய வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் அழிந்து போக வேண்டும்” என வரம் பெற்றான். வரத்தின் பலத்தால் ஆணவம் அதிகரித்தது. பூவுலக மன்னர்களை எல்லாம் தன்னிடம் சரணடையும்படி அறிவித்தான். ஏற்க மறுத்து எதிர்த்தவர்களை கொடூரமாகத் தாக்கினான்.
அவனது தாக்குதலுக்குப் பயந்த பலர் சரணடைந்தனர். அவர்களையும், அவர்களின் படைகளையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு தேவலோகத்தை முற்றுகையிட்டான். சிவனிடம் வரம் பெற்றதை அறிந்த தேவர்கள் போரிட்டு அழிவதைத் தவிர்க்க அசுரனைச் சரணடைந்தனர். பூலோகம், தேவலோகத்தைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அசுரனிடம் சிலர், “சிவனிடம் தாங்கள் அழியாத வரத்தை கேட்டுப் பெறுங்கள். அந்நிலையில் கடவுளுக்குச் சமமாகி விடலாம்” என்றனர்.
தானும் கடவுளாக வேண்டும் என்ற ஆசையுடன் தவமிருக்கத் தொடங்கினான். அவனது தவத்தைக் கண்டு பயந்த தேவர்கள், முனிவர்கள் அச்சமடைந்தனர். அனைவரும் பிரம்மலோகத்திற்குச் சென்று, ''பிரம்ம தேவரே! அசுரனின் தவத்தில் சிவன் மனமிரங்கி என்றும் அழியாத வரம் அளிப்பதை தடுக்க வேண்டும்'' என்றனர். “அசுரனுக்கு வரம் தரக் கூடாது என சிவனிடம் சொல்லும் தகுதி இல்லை. அசுரனின் தவத்தைக் கலைக்க என்னால் முடியாது” என்றார்.
அப்போது சரஸ்வதி தான் உதவி செய்வதாக வாக்களித்தாள். “கல்வித் தெய்வமான தங்களிடம் போர்க்குணம் கிடையாதே. அமைதியின் வடிவமான தாங்கள் அசுரன் வரம் பெறுவதை எப்படி தடுப்பீர்கள்?” எனக் கேட்டனர். அதற்கு அவள், ''காலம் வரும் போது புரிந்து கொள்வீர்கள்'' என்றாள்.
ஆண்டுகள் சில கடந்தன. அசுரனின் கடுந்தவத்தைக் கண்டு சிவன் மனம் இரங்கி காட்சியளித்த போது சரஸ்வதி யாருக்கும் தெரியாதபடி அங்கு வந்தாள்.
'என்ன வரம் வேண்டும்' என சிவன் கேட்ட சமயத்தில், அசுரனின் பேச்சுத் திறனை சரஸ்வதி பறித்ததால் அசுரனால் வரம் கேட்க முடியவில்லை. பதில் சொல்லாமல் நின்ற அசுரனிடம், 'என்னை பூலோகத்திற்கு வரவழைத்து விட்டு பதிலளிக்காமல் அவமதிப்பு செய்து விட்டாய். உனக்கு முன்பு கொடுத்த வரம் கூட இனி பலனளிக்காது. ஒரு பெண்ணால் உனக்கு அழிவு ஏற்படும்” எனச் சொல்லி மறைந்தார்.
பலன் பெறும் வேளையில் பேச முடியாமல் போனதே என அசுரன் வருந்தினான். தனக்கு ஒரு பெண்ணால் அழிவு வரும் என்ற விரக்தியால் அகப்பட்டவரை எல்லாம் தாக்கினான். பேச முடியாத அவனுக்கு மூகாசுரன் (மூகா - பேசும் திறன் அற்றவன்) என அழைக்கத் தொடங்கினர்.
மனம் போன போக்கில் வாழ்ந்த அவன் குடசாத்ரி மலையில் சவுபர்ணிகா ஆற்றங்கரையில் குடில் அமைத்து தங்கியிருந்த கோலமா முனிவரைக் கண்டான். அவர் அப்பகுதியில் எழுந்தருளி உள்ள சுயம்பு லிங்கத்தை தினமும் வழிபட்டு வந்தார்.
ஒருநாள் மூகாசுரன் முனிவரை வழிபட விடாமல் தாக்கினான். உயிர்களுக்கு எல்லாம் தாயான பார்வதியிடம் காப்பாற்றும்படி வேண்டினார் முனிவர். அங்கு வந்த பார்வதி அவனுடன் போரிட்டாள். தன் பலத்தை எல்லாம் இழந்து உயிரை இழக்க இருந்த போது, அசுரனுக்கு பேசும் திறனை கொடுத்தாள் சரஸ்வதி.
அப்போது அவன், '' தாயே... தங்களின் அருளால் பாவம் எல்லாம் தொலைந்து, என் ஆன்மா முக்தி பெற வேண்டும். என் உயிர் பிரியும் இந்த இடத்தில் தாங்கள் நிரந்தரமாக எழுந்தருள வேண்டும்” என வேண்டினான். அசுரனின் அழிவுக்கு துணை புரிந்த சரஸ்வதியின் வடிவிலேயே மூகாம்பிகை என்னும் பெயரில் கோலமாமுனிவர் வழிபட்ட சுயம்புலிங்கத்தில் பார்வதி எழுந்தருளினாள். அசுரனின் உயிர் பிரிந்தது. அதனை அறிந்த அனைவரும் மூகாம்பிகையைச் சரணடைந்து வழிபட்டனர்.
கல்வியில் சிறக்க...
கர்நாடக மாநிலம், குடசாத்ரி மலையில் சவுபர்ணிகா ஆற்றங்கரையிலுள்ள கொல்லுாரில் மூகாம்பிகை குடியிருக்கிறாள். சரஸ்வதியின் அம்சமாக இவள் மீது கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதற்காக, 'கலா ரோஹனம்' என்னும் துதியை ஆதிசங்கரர் பாடினார். ஆதிசங்கரர் இங்குள்ள சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்து இயற்றிய ஸ்தோத்திரம் சவுந்தர்ய லஹரி. கல்வி, கலைகளில் சிறக்க விரும்புவோர் இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.
கஷாயப் பிரசாதம்
ஆதிசங்கரர் இங்கு தங்கியிருந்த போது உடல்நலம் பாதிக்கப் பட்டார். அப்போது அம்பிகையே கஷாயம் செய்து கொடுக்க குணம் பெற்றார். இதை நினைவூட்டும் விதமாக தினமும் இரவு அர்த்த ஜாம பூஜையில், மூலிகைகளுடன் மிளகு, இஞ்சி, ஏலம், கிராம்பு, நெய், வெல்லம் சேர்த்து தயாராகும் கஷாயம் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
நோய்கள் தீர்க்கும் இந்த பிரசாதத்தை பக்தர்கள் அருந்துகின்றனர்.
-தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925