ADDED : டிச 29, 2023 08:35 AM

தெரிந்தும் தெரியாமலும் நாம் பாவங்களைச் செய்கிறோம். மற்றவர் மனதை நோகடிக்கிறோம். இதில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறையை விளக்கினார் காஞ்சி மஹாபெரியவர்.
''சனிக்கிழமையன்று நீராடியதும் கைப்பிடியளவு பச்சரிசியை கையில் வைத்தபடி சூரிய பகவானை வழிபடுங்கள். அதன்பின் விநாயகர் கோயிலுக்குச் செல்லுங்கள்.
அரச மரத்தடி விநாயகராக இருந்தால் மிகவும் நல்லது. மூன்று முறை வலம் வந்து மரம், கோயிலைச் சுற்றி பச்சரிசியைத் துாவுங்கள். அதை எறும்புகள் எடுத்தாலே முன்வினை பாவம், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவம் நம்மை விட்டு விலகும்.
அது மட்டுமா? எறும்புகள் அதை முழுமையாக சாப்பிடாமல் மழைக்காலத்திற்கு சேமித்து வைக்கும். ஆனால் பச்சரிசி கெட்டு போகுமே என்ற சந்தேகம் வரலாம். எறும்பின் எச்சில் படுவதால் அரிசி கெடாமல் ஓராண்டு அப்படியே இருக்கும்.
எறும்புகளுக்கு உணவளித்த புண்ணியமானது ஒருநாளில் முடியாது. ஆண்டுக் கணக்கில் உங்களைத் தொடரும். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சனிப்பெயர்ச்சியின் போது இதைச் செய்வது நல்லது. ஒரு எறும்புக்கு உணவளித்தாலே நுாறு பேருக்கு உணவிட்ட புண்ணியம் சேரும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச் சனியால் வருந்துபவர்கள் இதைச் செய்தால் பலன் கிடைக்கும்.
தர்மம் தலை காக்கும் என்பதால் தான் அரிசிமாவால் கோலமிடுகிறோம்'' என்றார் காஞ்சி மஹாபெரியவர்.