108 திவ்யதேச பெருமாளை தரிசித்த பலன்
108 திவ்யதேச பெருமாளை தரிசித்த பலன்
108 திவ்யதேச பெருமாளை தரிசித்த பலன்
ADDED : டிச 22, 2023 04:49 PM
தினமும் மாலை அரங்கனுக்கு க்ஷீரான்னம் (பால் அன்ன நிவேதனம்) நைவேத்யம் செய்வது வழக்கம். அப்போது 108 சரமாலைகளை சாற்றுவர். அதில் மேலே வெள்ளை மாலையும் அடுத்து வர்ணமாலையும் இருக்கும். இதை 'தர்பார் சேவை' என்பர். ஏன் இந்தப் பெயர்? முக்கியமானவர்கள் ஒன்றுகூடும் சபையை 'தர்பார்' என்று சொல்வோம்.
க்ஷீரான்ன நிவேதனத்தின்போது 108 திவ்யதேச பெருமாளும் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளுவர். பின் அரங்கனுடன் ஐக்கியமாகி மறுநாள் காலை திருப்பள்ளி எழுச்சி கண்டு பிறகு தங்கள் தலங்களுக்குச் செல்வார்கள். அதாவது அதிகாலையில் விஸ்வரூப தரிசனம் நடைபெறும்போது 108 திவ்ய தேச பெருமாளும் அரங்கனுடன் சேர்ந்திருப்பார்கள். இந்நேரத்தில் இவரை தரிசித்தால் 108 திவ்யதேசத்தில் இருக்கும் பெருமாளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.