Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சனீஸ்வரரின் அருள் பெற்றவர்

சனீஸ்வரரின் அருள் பெற்றவர்

சனீஸ்வரரின் அருள் பெற்றவர்

சனீஸ்வரரின் அருள் பெற்றவர்

ADDED : டிச 07, 2023 10:38 AM


Google News
Latest Tamil News
'எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்' என்னும் பழமொழிக்கான விளக்கத்தை காஞ்சி மஹாபெரியவர் பக்தர்களுக்கு விளக்கினார்.

சமஸ்கிருதத்தில் புலமை மிக்க மன்னர் ஹர்ஷர். இவர் சனிபகவானின் அருளைப் பெற்ற மன்னரான நளனின் வரலாற்றை 'நைஷதம்' என்னும் பெயரில் எழுதினார். நிஷத நாட்டு மன்னர் நளன் என்பதால் இப்பெயர் வந்தது. நேர்மையும், ஒழுக்கமும் மிக்க நளனின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்ட தமயந்தி அவர் மீது காதல் கொண்டாள். இதை அறியாத தமயந்தியின் தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார்.

அப்போது மணப்பெண் தமயந்திக்கு ஒவ்வொருவர் பற்றியும் விளக்கினாள் கல்வித்தெய்வமான சரஸ்வதி. அதில் பங்கேற்ற காஞ்சிபுரம் மன்னர் குறித்து, ''நகரில் கடல் போல பெரிய குளம் ஒன்றை இவர் உருவாக்கியுள்ளார். ஸ்படிகம் போல துாய்மையான நீர் நிரம்பிய அக்குளத்தின் அழகை வர்ணிக்க முடியாமல் கவிஞர்களே வாய் மூடி விட்டனர்.

அதிலுள்ள நீர்த்துளிகள் சேர்ந்தே வானில் சந்திரனாக மாறியதோ என நினைக்கும் விதத்தில் குளத்தின் நீர் இருக்கும். ஸ்படிக நிறம் கொண்ட யோகேஸ்வரரின் அபிஷேகத்திற்கு இந்த நீரே பயன்படுத்தப்படுகிறது' என்றாள். யோகேஸ்வரர் என சரஸ்வதி குறிப்பிட்டது காஞ்சி சங்கர மடத்திலுள்ள 'சந்திர மவுலீஸ்வரர்' ஸ்படிக லிங்கத்தை தான். ஆதிசங்கரர் கைலாயத்திற்குச் சென்ற போது சிவபெருமானிடம் இருந்து இதைப் பெற்றார்.

ஹர்ஷரின் நைஷதத்தில் 'யோகேஸ்வர' என்றே உள்ளது. ஆனால் அதை பிரதி எடுத்தவர் 'யாகேஸ்வர' எனத் தவறாக குறிப்பிட்டதால் குழப்பம் உருவானது. இதையே 'எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்' என்னும் பழமொழி குறிப்பிடுகிறது.

'யாகேஸ்வரர்' என்னும் பெயரில் எந்த ஸ்படிக லிங்கம் காஞ்சிபுரத்தில் இல்லை. அதன் பின்னரே நைஷதத்திற்கு உரை எழுதியவர்கள் 'யோகேஸ்வர' என மூலத்தில் இருப்பதைக் குறிப்பிட்டு தவறைச் சரிசெய்தனர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.

* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.

* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.

* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.

* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.

* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.

* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us