Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 4

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 4

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 4

விநாயகப்பெருமானின் வித்தியாச வடிவங்கள் - 4

ADDED : பிப் 20, 2025 08:33 AM


Google News
Latest Tamil News
வெற்றி அருளும் வீர கணபதி

குழந்தை, இளைஞர் ஆக இருந்த கணபதியே அடுத்ததாக, குமரப் பருவத்தில் இருப்பவராக, வீர கணபதி என காட்சி அளிக்கிறார். இத்தோற்றத்தில், அனைத்து முக்கிய தெய்வங்களின் ஆயுதங்களையும் கொண்டிருப்பார். எட்டுத் திசைகளையும் அவற்றிற்கு இடையேயுள்ள எட்டு இடைவெளிகளையும் வீர கணபதியின் 16 கைகள் குறிக்கின்றன.

தியான சுலோகம்

வேதாள சக்தி சர கார்முக சக்ர கட்க கட்வாங்க முத்கர கதாங்குஸ நாக பாசாந்!

சூலஞ்ச குந்த பரசு த்வஜ முத்வஹந்தம் வீரம் கணேச மருணம் ஸததம் ஸ்மராமி!!

அருணம் - சிவந்த நிறத் திருமேனிரும்

ஸததம் - எப்போதும்

வேதாள - வேதாளம் எனும் போர்ப்படை ஏவல் ஆயுதம்

சக்தி - சக்தி எனும் ஆயுதம்

சர - அம்பு

கார்முக - வில்

சக்ர - சக்ராயுதம்

கட்க - கத்தி

கட்வாங்க - கட்வாங்கம் எனும் ஆயுதம்

முத்கர - இரும்பு உலக்கை

கதா - கதை எனும் ஆயுதம்

அங்குச - அங்குசம் எனும் ஆயுதம்

நாக - படமெடுத்த நாகம்

பாசாந் - பாசக் கயிறு ஆகியவை

சூலம் - சூலாயுதம்

குந்த - ஈட்டி எனும் வேல்கம்பு ஆயுதம்

பரசு - கோடரி

த்வஜம்ச - கொடி

உத்வஹந்தம் - (ஆகிய 16 ஆயுதங்களைத் தனது 16 கைகளில்) தாங்கியிருப்பவரும்

வீரம் - வீர கணபதி எனும் பெயர் உடையவரும் மஹாவீரருமான

கணேசம் - கணேச்வரரை

ஸ்மராமி - மனதில் எண்ணி வணங்குகிறேன்

வேதாளம்: வேதாளம் எனும் போர்ப்படை ஏவல் ஆயுதம்

சக்தி ஆயுதம்: இச்சை, கிரியை, ஞானம் ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும். முருகனின் சிறப்பான ஆயுதம்

வில், அம்பு: போர்க்களத்தின் பிரதான போர்க்கருவிகள்.

சக்கரம்: விஷ்ணுவின் ஆயுதம், கூர்மை, செயல் நேர்த்தி இதன் உட்பொருள்.

கட்கம்: நீண்ட கத்தியும் கைப்பிடியும் கொண்டது. ஞானவாள்.

கட்வாங்கம்: காபாலிக சைவ சமயத்தின் அடையாளங்களில் ஒன்று. யோகி பயன்படுத்துவது.

முத்கரம்: பூண் போட்ட இரும்பு உலக்கை; எதிரிகளை அடிக்க உதவுவது.

கதாயுதம்: இது பிடிக்கும் தண்டமும் உருண்டையான முனைத்தலைப் பகுதியும் சேர்ந்த ஆயுதம்.

நாகம்: ஒன்று முதல் ஏழு தலைகள் வரை இருக்கும். எதிரிகளை மயக்க வல்லது.

பாசம்: கயிறு. உயிர்களைப் பிணைந்துள்ள மும்மலங்களையும் போக்குவது.

சூலம்: சிவபெருமானின் ஆயுதம். படைத்தல், காத்தல், அழித்தலைக் குறிக்கும்.

குந்தம்: ஈட்டி; கூர்மையான அறிவைக் குறிப்பது.

பரசு: கோடரி, சிவபெருமானின் ஆயுதம். உயிர்களின் பாசங்களை அறுப்பது.

கொடி: இறைவனின் பெருமையைக் காட்டுவது.

பலன்: காரிய சித்தி, நினைத்த காரியம் கைகூடுதல், வழங்குகளில் வெற்றி கிட்டுதல், எதிரிகளை வெல்லுதல், நோய் நீக்கம் பெறுதல்.

அருள் தொடரும்...

வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us