ADDED : பிப் 27, 2025 02:58 PM

பாகவதர் ஒருவர் கஜேந்திர மோட்சம் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார்.
''கஜேந்திரன் என்னும் தேவலோகத்து யானை தாமரை மலர் பறிக்க குளத்திற்குள் இறங்கியது. அங்கு வாழ்ந்த கூகு என்னும் முதலை, யானையின் காலைக் கவ்வி இழுத்தது. முதலையிடம் சிக்கிய யானை செய்வதறியாமல் திகைத்தது. இஷ்ட தெய்வமான மகாவிஷ்ணுவைச் சரணடைந்து 'ஆதிமூலமே' எனக் குரல் எழுப்பியது. அதைக் கேட்ட மகாவிஷ்ணு கருடன் மீது பறந்து வந்து காப்பாற்றினார்'' என்ற போது அங்கிருந்த பெரியவர் ஒருவர் இடைமறித்தார்.
''பாகவதரே! யானையின் கூக்குரல் வைகுண்டத்தில் இருக்கும் மகாவிஷ்ணுவை எப்படி எட்டியது?'' எனக் கேட்டார்.
பாகவதருக்கு பதில் தெரியவில்லை. ஏதோ படித்ததையும், கேட்டதையும் கொண்டு கதை சொன்ன அவர் விழித்தார். உடனே ''ஐயா! உங்கள் கேள்விக்குரிய பதிலை நான் சொல்கிறேன்'' என்றான் பாகவதரின் மகன். அதை கேட்க மக்கள் ஆர்வமாயினர்.
''மக்களே! எங்கோ வானத்தில் வைகுண்டம் இல்லை. கூப்பிடும் துாரத்தில் தான் வைகுண்டம் இருக்கிறது. பரம்பொருளான மகாவிஷ்ணு எங்கும் நிறைந்திருக்கிறார். நம்பிக்கையோடு அழைத்தால் அவர் இப்போதும் நம்மைக் காக்க ஓடி வருவார்'' என்றான்.
பக்திக்கு அடிப்படை நம்பிக்கை என்பதை மக்கள் அறிந்தனர்.