ADDED : அக் 17, 2024 12:00 PM

இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு வண்டியில் சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் செல்வது வழக்கம்.
ஒருநாள் மாணவர்களிடம், ''நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள்?'' என்று கேட்டார் ஆசிரியர். அதற்கு மாணவர்கள் அவரவருக்கு விருப்பமானதாக வழக்கறிஞர், ஆசிரியர், மருத்துவர், மாவட்ட ஆட்சியர் என சொல்லி கொண்டே வந்தனர். அப்போது குறிப்பிட்ட சிறுவன், ''நான் குதிரை வண்டிக்காரன் ஆவேன்'' என்றான். மாணவர்கள் சிரித்தனர், ஆசிரியரும் கேலி செய்தார். சிறுவன் வீட்டிற்கு சோகமாக வருவதைக் கண்டாள் அவனது தாய். பள்ளியில் நடந்ததை விவரித்தான். தாய் அவன் மீது வருத்தப்படவில்லை,. ''நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்'' எனக் கேட்டாள்.
'' தினமும் பள்ளிக்கு செல்லும் போது வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன். எனக்கும் அது போல் வண்டி ஓட்ட வேண்டும் என ஆசை எழுந்தது.'' என்றான். இதை கேட்ட தாய் மகாபாரத படம் ஒன்றை எடுத்துக் காட்டி, ''குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று நீ சொன்னதில் தவறில்லை, ஆனால் எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா - மகாபாரதத்தில் அர்ஜூனனுக்கு தேர் ஓட்டினானே பகவான் ஸ்ரீகிருஷ்ணன், அவனைப் போல நீயும் சிறந்த தேரோட்டியாக இருக்க வேண்டும்'' என்றார் சிறுவனுடைய தாய் புவனேஸ்வரி.
அந்த சிறுவனே உலகெங்கும் ராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.