ஒருமுறை அவ்வைப்பாட்டி நடந்தே கயிலாயம் சென்றாள். களைப்பு தீர அங்கு கால்நீட்டி அமர்ந்தாள். சிவபெருமான் இதை கண்டு கொள்ளவில்லை. ஆனால் பார்வதியோ கோபித்தாள்.
''சுவாமி! அகில உலகிற்கும் தலைவரான தங்களை நோக்கி இந்த பாட்டி கால் நீட்டி இருக்கிறாரே'' என்றாள்.
''நீயே கேள்'' என சிவபெருமான் மறுக்க, '' அவ்வையே... நீ செய்வது சரிதானா? கயிலைநாதரை நோக்கி கால் நீட்டலாமா'' என பார்வதி கேட்டாள்.
''தாயே... எந்த திசையில் சிவன் இல்லை எனத் தெரிவித்தால் அந்த திசையில் நீட்டுகிறேன்” என பதிலளித்தாள். பார்வதியும் நாலாபுறமும் திரும்பி பார்க்க எங்கும் சிவனின் அருள் வடிவம் இருப்பதைக் கண்டாள். எங்கும் சிவமயமாக இருப்பதை உணர்த்த சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் இது.