பெண்களிடம் மகாலட்சுமி எங்கிருக்கிறாள்
பெண்களிடம் மகாலட்சுமி எங்கிருக்கிறாள்
பெண்களிடம் மகாலட்சுமி எங்கிருக்கிறாள்
ADDED : மார் 20, 2025 01:19 PM

பெண்ணுக்கு அழகு குங்குமம். அதை இட்டுக் கொள்பவள் அம்பிகையின் அம்சம். நெற்றியில் மட்டுமல்ல; அதன் உச்சியிலும் (வகிடு) வைக்க வேண்டும். இதற்கான காரணத்தை காஞ்சி மஹாபெரியவர் விளக்குகிறார்.
'அம்பாளின் நெற்றி உச்சியில் வகிடு இருக்கிறது. கூந்தலை இரண்டு பகுதியாகப் பிரிக்கும் விதத்தில் ஒரு கோடு மேல் நோக்கிச் செல்லும். அந்த கோடுதான் வகிடு. அந்த காலத்தில் குங்குமத்தை அங்குதான் வைத்துக் கொள்வர். நெற்றியில் குங்குமம் வைப்பதெல்லாம் பிற்காலத்தில் தான் ஏற்பட்டது. இந்த வகிட்டுக்குப் பெயர்தான் சீமந்தம்.
கர்ப்பிணிகளுக்கு ' சீமந்த சடங்கை' எட்டாம் மாதத்தில் செய்வது வழக்கம்.
சரி... இந்த சீமந்தம் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? 'சீமா' என்றால் எல்லை. அதை சீமை என்றும் சொல்வர். ஆனால் இப்போது வெளிநாட்டை 'சீமை' என சொல்ல ஆரம்பித்து விட்டோம். தொலைவில் இருந்து வந்த வெள்ளைக்காரர்களை மேற்கு சீமைக்காரர்கள் என சொல்கிறோம்.
தலையின் வலப்பக்கம், இடப்பக்கத்தின் எல்லையாக வகிடு இருப்பதால், அதற்கும் சீமந்தம் எனப் பெயர் வந்தது. 'சீமாந்தம்' என்பது குறுகி, சீமந்தம் என வந்தது என்கிறது இலக்கணம். ஆக எல்லையாக இருக்கும் இடம் சீமந்தம்.
எல்லாம் வல்ல அம்பிகையின் நெற்றியின் உச்சியில் சிவப்பான குங்குமம் அழகாக இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். அதுதான் அழகு.
அம்பிகையின் அருளைப் பெற விரும்பும் பெண்கள், தலையை வாரும் போது நேராக வகிடு எடுத்து அதில் குங்குமம் இடுவதே சரியான முறை. ஏனெனில் அது தெய்வம் இருக்கும் இடம். ஒவ்வொரு உடலிலும் குறிப்பிட்ட இடத்தில் தெய்வம் உள்ளது. பசுவின் பின்புறத்திலும், யானையின் முகத்திலும் பூஜை செய்வர். இதே போல வில்வ இலையின் பின்புறமும், தாமரையின் மேல்புறமும் மகாலட்சுமி வசிக்கிறாள். அதனால் மகாலட்சுமி இருக்கும் இடமான நெற்றியின் உச்சியில் பெண்கள் குங்குமம் இடுவது அவசியம். இதை உணர்த்தவே அம்பிகை வகிட்டில் குங்குமம் இட்டுக் கொண்டு காட்சியளிக்கிறாள் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை தீர்க்கும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தெற்கு, மேற்கு நோக்கி பூஜை செய்ய வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com