Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பகவத்கீதையும் திருக்குறளும் -- 15

பகவத்கீதையும் திருக்குறளும் -- 15

பகவத்கீதையும் திருக்குறளும் -- 15

பகவத்கீதையும் திருக்குறளும் -- 15

ADDED : ஆக 22, 2024 04:44 PM


Google News
Latest Tamil News
நல்லதைச் செய்தால்...

ஞாயிறு அன்று கந்தன் வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றான். ஒரு விழிப்புணர்வு பேரணிக்காக நோட்டீஸ் கொடுத்தபடி வந்தார் ராமசாமி தாத்தா. அதைக் கண்ட அவன், ''என்ன தாத்தா செய்றீங்க'' எனக் கேட்டான். ''ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வுக்காக நோட்டீஸ் தர்றேன்'' என்றார்.

''இதை செய்யறதுக்கு எவ்வளவோ பேர் இருக்காங்களே? நீங்க ஏன் செய்யணும்?'' எனக் கேட்டான்.

''பகவான் கிருஷ்ணர் கீதையின் 3ம் அத்தியாயத்திலும், திருவள்ளுவர் 346வது குறளிலும் இந்த விஷயம் பற்றி சொல்லி இருக்காங்க தெரியுமா...

கர்மணைவ ஹி ஸம்ஸித் ³தி4மாஸ்தி ²தா ஜநகாத³ய:|

லோகஸங்க்³ரஹமேவாபி ஸம்பஸ்²யந்கர்துமர்ஹஸி

||3-20||

மாமன்னர் ஜனகர் உள்ளிட்ட அனைவரும் நற்செயல்களில் ஈடுபட்டே நற்கதி அடைந்தனர். அர்ஜூனா... நீயும் உலக நன்மையைக் கருதி நற்செயலில் ஈடுபடு.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

எந்த வகையில் முடியுமோ, அந்த வகையில் எல்லாம் செல்லும் இடங்களில் எப்போதும் அறச்செயல்களைச் செய்யுங்கள்.

'என்னதான் பற்று இல்லாதவராக இருந்தாலும், செல்லும் இடங்களில் எல்லாம் நம்மால் முடிந்த நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என இருவருமே சொல்கிறார்கள். அதனால் தான் இதைச் செய்கிறேன்' என விளக்கம் அளித்தார் தாத்தா. 'உங்கள் வழியில் நானும் நல்லதைச் செய்வேன்' என தாத்தாவை பின்தொடர்ந்தான்.

---தொடரும்

எல்.ராதிகா

97894 50554





      Our Apps Available On




      Dinamalar

      Follow us