ADDED : டிச 13, 2024 07:44 AM

காஞ்சி மஹாபெரியவரிடம் '' கடவுளை தாய் வடிவில் வணங்குவது ஏன்?'' எனக் கேட்டார் ஒருவர்.
''அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் அவ்வையார். 'மாதா பிதா குரு தெய்வம்' என்பார்கள். தந்தைக்கும் மேலாக தாயை முதல் தெய்வமாக இது குறிப்பிடுகிறது. தாயை தெய்வமாக நினைப்பது போலவே, தெய்வத்தை தாயாக நினைப்பது தான் அம்பிகை வழிபாடு.
அம்மாவை விட அன்பானவர் யார்? பயம் இல்லாமல் குழந்தைகள் அம்மாவிடம் உரிமை எடுப்பது போல, அம்பிகையிடம் பக்தர்கள் உரிமை கொள்ளலாம். தாயன்பு மாதிரி துாய்மையானது வேறில்லை. தன்னை நேசிக்காத நிலையிலும் அம்மா எதிர்பார்ப்பு இல்லாமல் குழந்தைகளை நேசிப்பாள். 'பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு' என்றொரு பழமொழி உண்டு. துஷ்டத்தனமான குழந்தை இருக்கலாம்; ஆனால் துஷ்ட அம்மா என ஒருத்தி இருக்க மாட்டாள்.
குழந்தைகள் இயல்பாகவே அம்மாவின் அன்பில் ஒட்டிக் கொள்வர். அவளது உயிரில், அவள் அளித்த உணவில் தானே நாம் வாழ்கிறோம். எல்லாம் பார்த்துக் கொள்வாள் என தாயின் நிழலில் வளர்கிறோம். அது போல தாயாக கருதி அம்பிகையைச் சரணடைந்தால் துன்பம் வராமல் பார்த்துக் கொள்வாள்.
உயிர்கள் அனைத்தும் அம்பிகையின் குழந்தைகள் தானே! குழந்தைகளாக இருந்த போது நம்மிடம் தெய்வத் தன்மை இருந்தது. கள்ளம் கபடமற்ற மனம் இருந்தது. வளர வளர இந்த எண்ணத்தில் இருந்து விலகுகிறோம்.
தெய்வத்தை தாயாகக் கருதி பக்தி செய்தால் நாம் மீண்டும் குழந்தையாகி விடுவோம். அந்நிலையில் தெய்வீக பண்புகள் மலரும். பசியோ நோயோ எதுவானாலும், 'அம்மா.. அம்மா' என குழந்தை தாயை சார்ந்திருப்பது போல அம்பிகையை சார்ந்தால் உலகத்தில் துன்பம் மறையும்'' என்றார் மஹாபெரியவர்.
அம்மாவே தெய்வம் என சிந்தித்தபடி விடைபெற்றார் பக்தர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.
* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.
* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.
* ஆயிரம் தெய்வம் இருந்தாலும் குலதெய்வத்துக்கு ஈடு இல்லை.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com