Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/நேர்மை

நேர்மை

நேர்மை

நேர்மை

ADDED : அக் 09, 2024 01:56 PM


Google News
Latest Tamil News
ஷீரடிக்கு அருகிலுள்ள கிராமத்தில் தார்க்காட் என்பவர் வசித்து வந்தார். அவருக்கு மனைவியும், ஒரு மகனும் இருந்தனர். இருவருக்கும் ஷீரடிபாபா மீது பக்தி அதிகம். ஆனால் தார்க்காட்டிற்கு அவ்வளவாக பக்தி கிடையாது. தார்க்காட்டின் மனைவி, மகனுக்கு ஷீரடி சென்று பாபாவை நேரில் தரிசிக்க வேண்டும் என விரும்பினர்.

ஆனால் ஷீரடி சென்று விட்டால் வீட்டிலுள்ள பாபாவின் திருவுருவச் சிலைக்கு நைவேத்யம் செய்வது யார்? எனத் தயங்கினர். அதையறிந்த தார்க்காட் அப்பணியை தான் செய்வதாக ஒத்துக்கொண்டார். நிம்மதியுடன் பாபாவை தரிசிக்க ஷீரடி புறப்பட்டனர்.

காலையில் எழுந்ததும் நீராடி பாபாவிற்கு நைவேத்யம் செய்து சாப்பிட்டார். இரண்டு நாட்கள் இந்த பணி சரியாக நடந்தது. மூன்றாம் நாள் நைவேத்யம் செய்யாமல் அலுவலகத்திற்கு அவசரமாக கிளம்பினார் தார்க்காட். வீட்டுக்கு திரும்பிய போது தான் தவறை உணர்ந்தார். மனைவிக்கு கொடுத்த வாக்கை மீறி விட்டோமே என வருந்தி ஷீரடியில் உள்ள மனைவிக்கு தெரியப்படுத்த கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் காலத்தில் ஒருவரை உடனடியாக தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி கிடையாது. தார்க்காட் வீட்டில் கடிதம் எழுத தொடங்கினார். அதே சமயத்தில் தார்காட்டின் மனைவியும், மகனும் ஷீரடியில் பாபாவின் முன் அமர்ந்து இருந்தனர். அனைத்தையும் உணர்ந்த பாபா, புன்சிரிப்புன் தார்க்காட்டின் மனைவியிடம், “இன்று உங்கள் வீட்டில் எனக்கு உணவு கிடைக்கவில்லையே...'' என்றார். தார்க்காட்டின் மனைவிக்கு புரியவில்லை.

ஆனால் மகன், ''இன்று வீட்டில் பாபாவிற்கு நைவேத்யம் செய்ய அப்பா மறந்து விட்டாரோ?'' என்றான். ஆனால் பாபா பதிலளிக்கவில்லை. இரண்டு நாள் கழிந்த பின் ஷீரடியில் உள்ள மனைவி, மகனுக்கு கடிதம் கிடைத்தது. பின்னரே அவர்களுக்கு உண்மை புரிந்தது. கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லையே என வருந்தி கடிதம் எழுதிய தார்க்காட்டின் நேர்மையும் பக்திக்கு ஈடானது தான்.

பக்தி இல்லாவிட்டாலும் பாபாவின் ஆசியைப் பெற்றார் தார்க்காட். இரண்டு நாளாக தார்க்காட் படைத்த நைவேத்தியத்தை பாபா ஏற்றார் அல்லவா!. வாக்கு தவறாமை, நேர்மை மிக அவசியம் என்பதை இதன் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us