Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/உருவத்தை காட்டிடும் கண்ணாடி! உலகத்தை வைத்திடும் முன்னாடி!

உருவத்தை காட்டிடும் கண்ணாடி! உலகத்தை வைத்திடும் முன்னாடி!

உருவத்தை காட்டிடும் கண்ணாடி! உலகத்தை வைத்திடும் முன்னாடி!

உருவத்தை காட்டிடும் கண்ணாடி! உலகத்தை வைத்திடும் முன்னாடி!

ADDED : ஜூலை 10, 2016 10:51 AM


Google News
Latest Tamil News
பணக்காரர் ஒருவர் தன் குருவிடம், “என் மனம் குழப்பத்தில் இருக்கிறது. என் மனைவி, பிள்ளைகள், பணியாட்கள் யாரும் உண்மையாக இல்லை. எல்லாரும் சுயநலத்துடன் உள்ளனர்,” என்றார்.

புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்.

ஆயிரம் கண்ணாடி கொண்ட அறை ஒன்றில், ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின.

'உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்!' என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.அதே இடத்துக்கு ஒருநாள் மனநிலை

சரியில்லாத ஒருவன் வந்தான். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டான்.

அச்சம் கொண்ட அவன், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவனை அடிக்க கை ஓங்கின. 'உலகிலேயே மோசமான இடம் இதுதான்!' எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினான்.

இந்தக் கதையைச் சொன்ன குரு, “ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறையை இந்த சமூகத்துக்கு ஒப்பிடலாம். நாம் எதை வெளிப்படுத்துகிறமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. எனவே உன் மனதை சரியாக வைத்திரு. நடப்பதெல்லாம் நல்லதாக தெரியும்,” என்றார்.

கி. புஷ்பலதா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us