Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சிவனை பூஜித்த சிலந்தி

சிவனை பூஜித்த சிலந்தி

சிவனை பூஜித்த சிலந்தி

சிவனை பூஜித்த சிலந்தி

ADDED : ஜன 30, 2023 12:11 PM


Google News
Latest Tamil News
கைலாய மலையில் புஷ்பதந்தன், மாலியவான் என்னும் சிவகணங்கள் இருந்தனர். இருவரில் சிறந்தவர் யார் என்பதில் போட்டி ஏற்பட்டது. அது நாளடைவில் பொறாமையாக மாறி ஒருவரையொருவர் சபித்தனர். அதன்படி மாலியவான் சிலந்தியாகவும், புஷ்பதந்தன் யானையாகவும் திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவலில் பிறந்தனர். முன்பு செய்த தவப்பயனாக அங்கிருந்த நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தை வழிபட்டனர். சிவலிங்கத்தின் மீது சருகுகள், வெயில் படாமல் சிலந்தி நுால்பந்தல் இட்டது. யானை சிவலிங்கத்தை வழிபட வரும் போது அதை சிதைத்து விட்டு வழிபட்டது.

பொறுமை இழந்த சிலந்தி, ஒருநாள் யானையின் துதிக்கையில் புகுந்து கடித்தது. சிலந்தியால் துன்பம் அடைந்த யானை, துதிக்கையை ஓங்கி நிலத்தில் அடிக்க, சிலந்தி இறந்தது. சிலந்தியின் விஷம் தாங்காமல் யானையும் இறந்தது. யானைக்கு சிவலோக பதவியும், சிலந்திக்கு கோச்செங்கட்சோழன் என்னும் மன்னர் பிறப்பும் கொடுத்தார். யானையைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அதன் துதிக்கைக்குள் சிலந்தி புகுந்ததால் அதற்கு மறுபிறவி கிடைத்தது. அப்பிறவியில் 70 சிவன் கோயில்களுக்கும், மூன்று பெருமாள் கோயில்களுக்கும் திருப்பணி செய்தவன் இந்த மன்னன்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us