Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/மாறிக்கொண்டே இருக்கும் மனம்

மாறிக்கொண்டே இருக்கும் மனம்

மாறிக்கொண்டே இருக்கும் மனம்

மாறிக்கொண்டே இருக்கும் மனம்

ADDED : மார் 05, 2023 08:18 AM


Google News
Latest Tamil News
தவம் செய்து கடவுளை அடையலாம் என எண்ணம் கொண்டார் சவுபரி முனிவர். அவர் காட்டுக்குப் போனால் அங்கே இருப்பவர்களால் தவம் கெடும் என நினைத்தவாறே தண்ணீருக்குள் சென்றார். முனிவர் கண்விழித்து பார்த்த போது மீன் குடும்பம், குடும்பமாக போய்க் கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும், 'என்ன அழகான குடும்பம். தாய், தந்தை மீன்கள் முன்னே செல்ல, குழந்தைகள் அதன் பின் அழகாக செல்கிறதே. தவமிருந்தும் கிடைக்காத இன்பம், இது தானோ' என முனிவர் நினைத்தார். பூமிக்கு மேலே சென்று ஒரு பெண்ணைத் தேடுவோம். அவளை மணந்து பிள்ளைகளுடன் சுகமாக இருப்போம் என்று எண்ணி வெளியே வந்தார்.

வழியில் மாந்தாதா என்ற மன்னனைச் சந்தித்தார். அவனுக்கு ஐம்பது மகள்கள். அதில் யாராவது ஒருவரைக் கேட்போம் என பேசினார். என் மகள்களுக்கு சுயம்வரம் வைத்து, அவர்கள் விரும்பும் மாப்பிள்ளையை மணம் முடிக்க முடிவு செய்துள்ளேன். ஆதலால் பெண்ணைத் தர இயலாது என்றார். பரவாயில்லை என்னையும் பார்க்கட்டும், யாருக்காவது பிடித்திருந்தால் மணந்து கொள்ளட்டும் என்றார் முனிவர். இவரை தன் மகள்களில் ஒருவர் கூட கட்டிக் கொள்ளமாட்டார் என்ற தைரியத்தில் அவர்களிடம் அனுப்பி வைத்தார் மன்னர்.

தன் தவவலிமையால் அழகான இளைஞனாக மாறி உள்ளே சென்றார். அவரைக்கண்ட அனைவரும் அவரைத் தான் திருமணம் செய்வோம் என அடம்பிடித்தனர். மாந்தாதா மன்னரும் வேறு வழியின்றி மணம் முடித்து வைத்தார். முனிவரும் தன்னுடைய வலிமையால், ஐம்பது சிறு மாளிகைகளை உருவாக்கி அதில் அவர்களை தங்க வைத்தார். சிலநாட்கள் கழித்து மன்னர் முதல் மகளின் வீட்டுக்குப் போய் நலம் விசாரித்தபோது,''அப்பா! அவர் என் மேல் உயிரையே வைத்துள்ளார். ஆனால், அவர் இங்கு மட்டும் தான் இருக்கிறார். தங்கைகளின் வீட்டிற்கு போகவில்லை'' என்றாள். இதைக்கேட்ட மன்னரோ மற்ற மகள்கள் வீட்டுக்கு சென்றார். அவர்களும் முதலாமவள் சொன்ன பதிலையே சொன்னார்கள். முனிவரும் ஐம்பது இளைஞர்களாக வடிவம் எடுத்து எல்லா வீட்டிலும் இருந்தது தெரிய வந்தது. ஒரு பெண்ணுக்கு இருவர் வீதம் நுாறு பிள்ளைகளைப் பெற்றார். அவர்களுடன் ஒருநாள் கோயிலுக்கு செல்லும் போது திடீர் என ஞானோதயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு வந்து விட்டதே முன்னால் இருந்த தவவாழ்க்கையே மேலானது என நினைத்த மீண்டும் காட்டிற்கு புறப்பட தயாரானார். பெரியவர்களின் மனசும் கூட, குழந்தைகளைப் போல மாறிக்கொண்டே இருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us