Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பதவி வரும் போது...

பதவி வரும் போது...

பதவி வரும் போது...

பதவி வரும் போது...

ADDED : டிச 20, 2019 03:29 PM


Google News
Latest Tamil News
போரில் தோற்ற ராவணன், மரணப்படுக்கையில் கிடந்தான். அவனது காலடியில் நின்ற ராமர், ''இலங்கேஸ்வரா! தாங்கள் பெற்ற ஞானம் உங்களோடு அழிய கூடாது. நீங்கள் அதை உபதேசித்தால் வருங்காலத்தில் உலகமே பயன் பெறும்'' என வேண்டினார்.

அவனும் அதை ஏற்றான்.

1. உனது சாரதி, (தேரோட்டி) வாயில் காவலன், சகோதரனிடம் பகை கொள்ளாதே. அவர்கள் உடனிருந்தே கொல்ல வாய்ப்புண்டு.

2. தொடர்ந்து வெற்றி வாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என ஒருபோதும் எண்ணாதே.

3. தவறு, குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

4. அனுமனைச் சிறியவன் என நான் எடை போட்டது போல், எதிரியை எளியவனாக கருதி விடாதே.

5. வானிலுள்ள நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே. அவை நம் வழிகாட்டிகள்.

6. உலகையே கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒருவருக்கும் இல்லை.

7. கடவுளை விரும்பினாலும், மறுத்தாலும் முழுமையாகச் செய்.

எதிரியைக் கூட வணங்கி உபதேசம் கேட்பது எவ்வளவு உயர்ந்த பண்பு. ராமரைப் போல பதவி வரும் போது பணிவுடன் நடப்பவனே வாழ்வில் உயர முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us