Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : செப் 22, 2023 10:31 AM


Google News
Latest Tamil News
செப். 22 புரட்டாசி 5: சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கபாவாடை தரிசனம். நாட்டரசன் கோட்டை, குணசீலம் இத்தலங்களில் எம்பெருமான் பவனி வரும் காட்சி. அஹோபில மடம் ஸ்ரீமத் 1வது பட்டம் அழகிய சிங்கர் நட்சத்திரம்.

செப்.23 புரட்டாசி 6: கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப்பெருமாள் திருக்கல்யாணம். இரவு புஷ்பக விமானத்தில் பவனி. திருப்பதி ஏழுமலையப்பன் காலை சூரியபிரபையிலும், இரவு சந்திரபிரபையிலும் புறப்பாடு. அஹோபில மடம் ஸ்ரீமத் 20 வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். பெருமாள் தலங்களில் கருடசேவை தரிசனம்.

செப்.24 புரட்டாசி 7: மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் காலை வெண்ணெய்த்தாழி சேவை. ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய பெருமாள் குதிரை வாகனத்தில் சேவை. ஏனாதி நாயனார் குருபூஜை.

செப்.25 புரட்டாசி 8: திருவோண விரதம். சர்வஏகாதசி. சாத்துார் வேங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு. வேதாந்த தேசிகர் நட்சத்திரம்.

செப்.26 புரட்டாசி 9: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியபெருமாள் வெட்டிவேர் சப்பரத்தில் புறப்பாடு. சுவாமிமலை முருகன் தங்க பூமாலையில் தரிசனம்.

செப்.27 புரட்டாசி 10: பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் மாலையில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு ஆராதனை. நரசிங்கமுனையரையர் குருபூஜை. அஹோபில மடம் ஸ்ரீமத் 17 வது பட்டம் அழகியசிங்கர் திருநட்சத்திரம்.

செப். 28 புரட்டாசி 11: கதளீ கவுரி விரதம். அனந்த விரதம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us