Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : ஏப் 19, 2019 02:59 PM


Google News
ஏப்ரல் 20 சித்திரை 7: திருக்குறிப்புத் தொண்டர் குருபூஜை, அழகர்கோவில் கள்ளழகர் காலை சேஷ வாகனம், பகல் கருட வாகனம், இரவு தசாவதார காட்சி, வீரபாண்டி கவுமாரி பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி காலை சேஷ வாகனம், இரவு சிம்ம வாகனம்.

ஏப்ரல் 21 சித்திரை 8: சென்னை சென்னகேசவப் பெருமாள் காலை கருடவாகனம், இரவு சந்திர பிரபை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் மோகன அவதாரம், இரவு மைசூரு மண்டபத்தில் பூப்பல்லக்கு, கோவை தண்டுமாரியம்மன் பவனி, சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் விடையாற்று உற்ஸவம்.

ஏப்ரல் 22 சித்திரை 9: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி காலை சூரிய பிரபை, இரவு சந்திர பிரபையில் பவனி, கோவை தண்டுமாரியம்மன் பவனி, கள்ளக்குறிச்சி கலியப்பெருமாள் ஏகாந்த சேவை, வீரபாண்டி கவுமாரியம்மன் புறப்பாடு, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் அபிேஷகம்.



ஏப்ரல் 23 சித்திரை 10: வாஸ்து நாள் மனை, மடம், ஆலயம், கிணறு வாஸ்து செய்ய பூஜை நேரம் காலை 8:54- 9:30 மணி, சென்னை சென்ன கேசவப் பெருமாள் நாச்சியார் கோலம், இரவு தங்கப் பல்லக்கு, கோவை தண்டுமாரியம்மன், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, சுவாமிமலை முருகன் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

ஏப்ரல் 24 சித்திரை 11: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி காலை சூர்ணாபிேஷகம், இரவு புண்ணியகோடி விமானத்தில் பவனி, நெல்லை நெல்லையப்பர், காந்திமதி திருமஞ்சனம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, செம்பனார்கோவில் சொர்ணபுரீஸ்வரர் எழுந்தருளல்

ஏப்ரல் 25 சித்திரை 12: சென்னை சென்ன கேசவப்பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர், சுவாமிமலை முருகன் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, செம்பனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் வீதியுலா, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி உற்ஸவம் ஆரம்பம்.

ஏப்ரல் 26 சித்திரை 13: முகூர்த்த நாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி தங்கப்பல்லக்கு, திருவிடை மருதுார் பிரகத்குசாம்பிகை, ஸ்ரீரங்கம் நம்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us