Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/பிரச்னைக்கு தீர்வு வந்தாச்சு

பிரச்னைக்கு தீர்வு வந்தாச்சு

பிரச்னைக்கு தீர்வு வந்தாச்சு

பிரச்னைக்கு தீர்வு வந்தாச்சு

ADDED : ஆக 04, 2023 10:42 AM


Google News
Latest Tamil News
* முடிந்தவரை அமைதியாக இரு. இதுவே பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு.

* கடவுளுக்குத் தொண்டு செய். இதை விட சிறந்த அனுபவம் வேறில்லை.

* கடவுள் யாரையும் தண்டிக்க விரும்பமாட்டார். ஏனெனில்

அவர் அன்பே உருவானவர்.

* உழைப்பு ஒன்றே கடவுள் உன்னிடம் எதிர்பார்க்கிறார்.

* ஒரு முயற்சியில் எவ்வளவு கடினம் உள்ளதோ அவ்வளவு வெற்றி இருக்கும்.

* நீ செய்யும் முயற்சிக்குரிய பலன் ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும்.

* பிறவி என்பது மதிப்பிட முடியாத வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்துபவரே உயர்வு அடைவார்.

* உணர்ச்சி வசப்படாதே. மீறினால் ஒரு முடிவைக்கூட எடுக்க முடியாமல் தடுமாறுவாய்.

* பேச்சை விட செயலுக்கு முன்னுரிமை கொடுத்தால் வெற்றி பெறலாம்.

* பிறருக்கு புத்திமதி கூறும் முன் உனக்கு அத்தகுதி உள்ளதா என பார்த்துக்கொள்.

* புத்தி சொல்வதை விட அதை பின்பற்றுவது சிறந்தது.

* எதிலும் ஒழுக்கமாக இருப்பது என்பது வளர்ச்சிக்கான வழிமுறை.

* உனது குறிக்கோளைப் பொறுத்தே வாழ்வு அமையும்.

* கிடைத்த வாழ்க்கையை மனம் விரும்பி வாழ கற்றுக்கொள்.

* மற்றவர்களின் விஷயத்தில் ஒருபோதும் தலையிடாதே.

என்கிறார் ஸ்ரீஅன்னை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us