ADDED : ஆக 11, 2023 02:04 PM

* மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புகளைக் கொண்டது ராமேஸ்வரம். ஏன் தெரியுமா... பரம்பொருளான ஸ்ரீராமபிரான் வழிபட்ட தலம் அல்லவா.
* இங்கு மூர்த்தியாக சிவபெருமானும், தலமாக சேதுஸ்தலம் என்னும் ராமேஸ்வரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் என்னும் கடலும் ஒன்றை ஒன்று விஞ்சிய சிறப்பை பெற்றது.
* பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே யார் உயர்ந்தவர் என்ற விவாதம் ஏற்பட்டது. உடனே சிவபெருமான் ஒளி வடிவில் எழுந்தருளி, 'இந்த ஒளி எங்கு முடிகிறது' என்று கேட்டார். இருவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி சிவபெருமானின் ஒளி பிம்பங்கள் பட்ட இடங்களில் எல்லாம் ஜோதிர் லிங்கங்கள் உண்டாயின. அதில் ஒன்றுதான் ராமேஸ்வரம்.
* ராமபிரான் தனது தோஷம் நீங்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கியுள்ளார். இதனால் இன்றும் காசியில் சப்தரிஷி பூஜையின்போது, வில்வ இலையில் 'ராம' நாமத்தை எழுதி அர்ச்சனை செய்கின்றனர்.
* காசியாத்திரை என்பது ராமேஸ்வரத்தில் தொடங்கி மறுபடியும் ராமேஸ்வரத்தில் பூர்த்தியாக வேண்டும். அதாவது ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு சென்ற கோடி தீர்த்தத்தால், காசி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின் அங்கு இருந்து கொண்டு வந்த கங்கை தீர்த்தத்தால், ராமநாதசுவாமியை பூஜிக்க வேண்டும்.
* அக்னி புராணம், பாகவதபுராணம், பத்மபுராணம், மார்க்கண்டேயபுராணம், கந்தபுராணம், சேதுபுராணம், கூர்மபுராணம் ஆகியவை ராமேஸ்வரம், தனுஷ்கோடியின் பெருமைகளை கூறுகின்றன.
* கோடித்தீர்த்தத்தில் நீராடுகின்றவர்கள் அரசப்பதவியை அடைவார்கள்.
* கடலில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே நீராட வேண்டும். ஆனால் ராமேஸ்வரம் அக்னித்தீர்த்தத்தில் எல்லா நாட்களிலும் நீராடலாம்.