Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : ஜூலை 30, 2023 05:59 PM


Google News
Latest Tamil News
* 'ஓம் ஹ்ரீம் க்லீம் ஹும் மாதங்க்யை ப்பட் ஸ்வாஹா' என்பது ராஜமாதங்கியின் மூலமந்திரம். இதை தினமும் 16 முறை ஜபிப்பவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

* ஆணின் வயதை விட பெண்ணின் வயது குறைவாக இருக்கும்படி திருமணம் செய்து கொடுங்கள். விவாக மந்திரங்களில் சிறியவள் என்ற வார்த்தையே பல இடங்களில் வரும்.

* பிரதமை திதியை 'பாட்டிமை' என சொல்லி ஒதுக்கி வைக்கிறோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமையில் பிரதமை திதி வந்தால் அது சிறப்புடையது.

* பசுவின் சாணத்தால் மெழுகிய மண் தரை வீட்டில், திதி கொடுப்பது உயர்ந்தது.

* பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யும் நாளில் புழுங்கல் அரிசியிலான சாதம், இட்லியை சாப்பிடக்கூடாது.

* பூணுாலில் இரும்பு சாவி, தாயத்து, டாலர் முதலியவற்றை சேர்க்கக்கூடாது.

* வீட்டு வாசலில் தினமும் கோலமிட வேண்டும். பெயிண்ட், ஸ்டிக்கரால் ஆன கோலங்களை பயன்படுத்தக்கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us