Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வறுமை தீர்ப்பவள்

வறுமை தீர்ப்பவள்

வறுமை தீர்ப்பவள்

வறுமை தீர்ப்பவள்

ADDED : ஆக 04, 2023 10:41 AM


Google News
Latest Tamil News
வானத் தமரர் பரவுமொரு

வடிவார் அமுதப் பைங்கிளியே

வறுமைப் பிணிதீர் மருந்தீசர்

மருவி அணைக்கும் சுடர்க்கொடியே

மோனத் திருந்து தவம்புரியும்

முனிவர் உளத்தில் அருளுருவாய்

முகிழ்க்கும் துரிய மணமலரே

மோகம் எழுப்பும் எழில்மதியே

ஞானத் துயரும் அறிஞர்தம்

நலமார் இதயக்கோயிலிலே

நடஞ் செய் திரிபுர சுந்தரியே

ஞாலம் புகழும் மாமயிலே

கானம் வளரும் வான்மியூர்

கண்ட மணியே வருகவே

கலியில் என்னை உயர்த்திடுமோர்

கனிவே வருக வருகவே

மருத்துவத்துறையில் பணிபுரிபவர்களின் ஆத்மார்த்த தலம் சென்னையிலுள்ள திருவான்மியூர். இங்குள்ள சிவபெருமானை வால்மீகி பூஜித்தார் என்பதால் அவர் பெயரில் இத்தலம் அமைந்துள்ளது.

அகத்தியரின் வயிற்று வலி நோயை இத்தல சிவபெருமான் குணப்படுத்தி அருளியதால் அவருக்கு மருந்தீசர் என்ற சிறப்பு உண்டு.

காமதேனு, வேதங்கள், சூரியன், தேவார மூவர்கள், அப்பைய தீட்சிதர், மற்றும் பல்வேறு அருளாளர்களால் வழிபாடு செய்த தலம். அவர்களின் சிதம்பரம் என்னும் அடியாரால் பாடப்பெற்ற பாடல் இது.

எந்த அம்பிகையின் சன்னதியின் முன் நின்று இப்பாடலை பாடினாலும் திரிபுர சுந்தரியின் அருள் கிடைக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us