ADDED : ஏப் 21, 2015 10:23 AM
திருமகளே திருப்பாற்கடல் ஊடன்று தேவர்தொழ
வருமகளே உலகு எல்லாமும் என்றென்றும் வாழ வைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலை மீது நின் தாளை வையே.
பொருள்: செல்வம் தருபவளே! பாற்கடலில் பிறந்தவளே! தேவர்களால் வணங்கப்படுபவளே! உலகத்தை வாழ வைப்பவளே! திருமாலின்
மார்பில் குடியிருப்பவளே! மனவலிமை தருபவளே! எளியவனான என் தலை மீது உன் திருவடியை வைத்து அருள்புரிவாயாக.
குறிப்பு: வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் எழுதிய திருமகள் அந்தாதி பாடல்.