ADDED : மார் 12, 2020 02:36 PM

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே.
பொருள்: நன்மை அனைத்தும் கொண்டவனே! தீமை என்பதே இல்லாதவனே! வெண்ணிறக் காளையை வாகனமாகப் பெற்றவனே! பார்வதியை உடம்பில் சரிபாதியாக வைத்தவனே! நீங்காத செல்வம் பெற்றவனே! திருச்சிராப்பள்ளி என்னும் குன்றில் குடிகொண்டவனே! சிவபெருமானே! உன்னைச் சிந்தித்தால் என் உள்ளம் குளிர்ச்சி பெறும்.