Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

ADDED : ஜூன் 09, 2019 10:08 AM


Google News
Latest Tamil News
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை

இடந்த நம்பி, எங்கள் நம்பி எறிஞர் அரண் அழிய

கடந்த நம்பி கடியார் இலங்கை உலகை ஈரடியால்

நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.

(திருமங்கையாழ்வார் பாடிய பாடல்)

பொருள்: குடந்தை (கும்பகோணம்) என்னும் திவ்யதேசத்தில் சயன நிலையிலுள்ள என் தலைவன், பன்றி வடிவில் வந்து, கடலில் மூழ்கிய பூமிதேவியைக் காத்தான். அவனே எங்கள் கடவுள். சீதைக்காக இலங்கையில் பகைவர் அரண்களை அழித்து கோட்டைகளைக் கடந்து சென்று மீட்டான். அவன் யார்? அவனது திருநாமம் என்ன? இப்பூவுலகையே தன் திருவடியால் அளந்த நம்பி அவன். அவன் திருநாமம் 'நமோ நாராயணா'.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us