Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா...!

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா...!

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா...!

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா...!

ADDED : ஜூலை 31, 2023 12:25 PM


Google News
Latest Tamil News
கல்யாண வரம் தரும் வாரணமாயிரம் பாடலை தினமும் பாடுங்கள்.

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம்

இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை

பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே

தொல்பாவை

பாடி அருளவல்ல பல்வளையாய

நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற

இம்மாற்றம்

நாங்கடவா வண்ணமே நல்கு.

கோதை பிறந்த ஊர்; கோவிந்தன் வாழுமூர்

சோதி மணிமாடம் தோன்றுமூர்; நீதியால்

நல்ல பத்தர் வாழுமூர் நான் மறைகள் ஓதுமூர்

வில்லிபுத்துார் வேதக் கோனுார்

வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து

நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்

தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு

பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ்

கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்

காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்

வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து

மந்திரக் கோடி உடுத்தி மணமாலை

அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி

பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி

பூப் புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக்

காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

கதிர் ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்

சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள

மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும்

அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான்

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத

முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்

வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்

பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து

காய் சின மாகளிறு அன்னான் என் கைப்பற்றி

தீவலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான்

இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான்

நம்மை உடையவன் நாராயணன் நம்பி

செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்

வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம்

வந்திட்டு

எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி

அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை

வைத்துப்

பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ

நான்

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து

மங்கல வீதி வலஞ் செய்து மாமண நீர்

அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு

ஆனைமேல்

மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை

வேயர் புகழ் வில்லிபுத்துார்க்கோன் கோதை

சொல்

துாய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்

வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே





      Our Apps Available On




      Dinamalar

      Follow us