Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : மே 12, 2015 11:40 AM


Google News
Latest Tamil News
* ராமேஸ்வரம் கோயிலில் ஈரத்துணியுடன் பிரகாரத்தைச் சுற்றலாமா?

ஈ.மீனாட்சி, திருமுல்லைவாயில்

தீர்த்தங்களில் நீராடி ஈரத் துணியுடன் கோயிலை வலம் வரக்கூடாது. உலர்ந்த ஆடையை உடுத்தியே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். ராமேஸ்வரம் மட்டுமில்லாமல் எல்லா திருத்தலங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். ராமேஸ்வரத்தில் ஈர ஆடையுடன் உலா வர வேண்டாம் என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.

* செம்பருத்தி மலர் எந்த தெய்வத்திற்கு உகந்தது?

கே. முருகன், புதுச்சேரி

விநாயகர், முருகன், அம்பிகை, சிவன், சூரியனுக்கு உகந்தது. இந்த மலரால் பூஜித்தால் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் உண்டாகும். நவக்கிரக ஸ்தோத்திரத்தில் சூரியனை 'செம்பருத்தி போல சிவந்த நிறம் கொண்டவரே' என்று வியாசர் குறிப்பிட்டுள்ளார்.

* உடல்நிலை காரணமாக கோயிலுக்குச் செல்ல முடியவில்லை. வீட்டில் பிரதோஷ பூஜை செய்யலாமா?

ஜி.கன்னையன், கூத்தப்பாக்கம்

தாராளமாக! பிரதோஷத்தன்று மாலை 4.30- 6.00 மணிக்குள் சிவலிங்கம், நந்திக்கு பால், பன்னீர் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரித்து பொங்கல் நைவேத்யம் செய்யுங்கள். சிவபுராணம், அஷ்டோத்திரம், தேவாரம் படியுங்கள். விரதம் இருந்து பூஜித்தால் மிகவும் நல்லது.

* திருமண வீட்டில் தேங்காய் கொடுத்து அனுப்புவது ஏன்?

அ.செல்வராணி, காரைக்குடி

சுபநிகழ்ச்சிக்கு அழைக்கும்போதும், வழியனுப்பும் போதும் லட்சுமியின் அம்சமான வெற்றிலை,பாக்கு கொடுப்பது வழக்கம். இதனை 'தாம்பூலம்' என்பர். சுபநிகழ்ச்சிகளுக்கு வரும் உறவினர்கள் மீண்டும் இன்னொரு சுபவிஷயத்தில் சேர வேண்டும் என்பதற்காக இவ்வாறு தரும் வழக்கம் உருவானது. தாம்பூலத்தோடு தேங்காய், பழம், இனிப்பு, சாக்லெட் சேர்த்து கொடுத்ததெல்லாம் பிற்காலத்தில்!. தற்போது வெற்றிலை, பாக்கு வழக்கம் குறைந்து விட்டதால் தேங்காய், பிஸ்கட், தின்பண்டங்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

* காலியிடத்தில் நவதானியம் விதைத்து பசுவை மேய விட்டு அதில் வீடு கட்டுகிறார்களே! ஏன்?

ஆர்.சாந்தா, காட்டுக்கூடலூர்

பசுவின் பாதம் பட்ட இடம் புனிதம் பெறும் என்பது ஐதீகம். ராஜராஜசோழன் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டும் முன், அந்த இடத்தில் தொழுவம் அமைத்து பசுக்களைத் தங்க வைத்ததாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. புதிய வீடு, கோயில் மட்டுமில்லாமல் பழைய வீட்டை இடித்து புதுப்பித்தாலும் அந்த இடத்தில் தானியம் விதைத்து பசுக்களை மேயச் செய்வதுண்டு. இதனால் முன்னோர் சாபம் நீங்கும்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us