ADDED : அக் 13, 2023 03:10 PM

டி.மஞ்சுளா, தோவாளை, கன்னியாகுமரி.
*நவராத்திரியைக் கொண்டாடுவது ஏன்?
வாழ்வில் வெற்றி பெற புத்தி(சரஸ்வதி), பணம்(மகாலட்சுமி), உடல்பலம்(துர்கை) ஆகியவை அவசியம். இவற்றை பெற நவராத்திரியை கொண்டாடுகிறோம்.
எஸ்.ஸ்ரீவித்யா, அபிராமம், ராமநாதபுரம்.
*சரஸ்வதி, மகாலட்சுமிக்கு நடுவில் விநாயகர் இருப்பது ஏன்?
வெற்றி பெற புத்தி, பணம் மட்டும் போதாது. தடையின்றி செயல்கள் நிறைவேற விநாயகரை நடுவில் வைத்து வழிபடுகிறோம்.
ஜி.சிவகாமி, முகப்பேர், சென்னை.
*சரஸ்வதி பூஜை, விஜயதசமி - இதில் புஷ்பாஞ்சலி நடத்த ஏற்ற நாள் எது?
விஜயதசமியன்று அம்பிகைக்கு கோயில்களில் புஷ்பாஞ்சலி நடத்துவர்.
ஸ்ரீ.ரமா, மாரத்தஹள்ளி, பெங்களூரு.
*அம்பிகைக்கு மட்டும் ஒன்பது நாள் விழா ஏன்?
அசுரர்களான மகிஷன், சும்பன், நிசும்பன் ஆகியோரை அழிக்க ஒன்பது நாள் அம்பிகை தவமிருந்தாள். விஜயதசமியன்று போரிட்டு வென்றாள். இதை ஒன்பது நாள் விழாவாக நடத்துகிறோம்.
சி.வந்தனா, பூந்தமல்லி, திருவள்ளூர்.
*நவராத்திரி விரதமிருப்பது எப்படி?
வெங்காயம், பூண்டை தவிர்த்து தினமும் மதியம் ஒருவேளை சோறு சாப்பிடுங்கள். பசி பொறுக்க முடியாதவர்கள் மட்டும் இரவில் பழம் அல்லது பலகாரம் சாப்பிடலாம்.
வி.கிஷோர், கங்கைகொண்டான், திருநெல்வேலி.
*நவராத்திரியின் போது புதிய தொழில் தொடங்கலாமா?
புதிய தொழில் தொடங்க கூடாது.
பி.ஈஸ்வரி, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.
*கொலுவில் எத்தனை படிகள் இருக்க வேண்டும்?
எப்போதும் ஒற்றைப்படை எண்ணில் இருக்க வேண்டும். உதாரணம் 1, 3, 5, 7, 9.
ஆர்.சிந்துஜா, கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி.
*எந்த மாதம் எந்த நாளில் நவராத்திரி வரும்?
புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் நவமி வரையுள்ள ஒன்பது நாட்களும் நவராத்திரி.
கே.ஆர்த்தி, தேவதானப்பட்டி, தேனி.
*கொலு என்பதன் பொருள் என்ன?
கொலு என்றால் அழகு. அம்பிகையைச் சுற்றி எல்லா தெய்வங்களும் இருக்க, அவள் சிம்மாசனத்தில் காட்சியளிப்பதே கொலு அலங்காரம்.
எம்.காயத்ரி, கன்னாட்பிளேஸ், டில்லி.
*மூன்று தேவியரில் யாரை வழிபடலாம்?
கடவுளை பிரிக்க கூடாது. மூவரும் சேர்ந்த கோலமான ராஜராஜேஸ்வரியை வழிபடுங்கள்.