ADDED : அக் 06, 2023 03:00 PM

கே.ராஜேஸ்வரி, வையாவூர், காஞ்சிபுரம்.
* நிறைமாத கர்ப்பிணி கோயிலுக்கு செல்லலாமா?
கோயிலுக்குச் செல்லலாம். அழகும், அறிவும் நிறைந்த குழந்தை பிறக்கும்.
ஆர்.கோபி, வாஸ்காஸ், டில்லி.
* மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பதன் பொருள் என்ன?
மூர்த்தி - மூலவர், தலம் - தலவிருட்சம், தீர்த்தம் - தெப்பக்குளம். இந்த மூன்றும் ஒரு கோயிலுக்கு முக்கியம்.
வி.கண்ணம்மாள், வில்லுக்குறி, கன்னியாகுமரி.
* அங்கப்பிரதட்சணம் - எப்படி தொடங்க வேண்டும்?
வேண்டுதலைச் சொல்லி சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின் சன்னதியை வலம் வந்து கொடிமரத்தில் விழுந்து வணங்கி, நேர்த்திக் கடனை நிறைவேற்ற வேண்டும்.
பி.ராணி, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி.
* புத்திர தோஷம் தீர என்ன செய்யலாம்?
தங்களின் ஜாதகத்தை ஆராய்ந்து அதற்கான பரிகாரத்தை செய்யுங்கள்.
கே.பிரேமா, மடிக்கேரி, மைசூரு.
* கிழக்கு பார்த்த மூலவரை வடக்கு நோக்கியும், மேற்கு பார்த்த மூலவரை தெற்கு நோக்கியும் வழிபடச் சொல்வது ஏன்?
இது தவறான கருத்து. கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே சுவாமியை வழிபட வேண்டும்.
எம்.வரதராஜன், உத்தங்குடி, மதுரை.
* நள்ளிரவு நேரத்தில் பூஜை நடத்தலாமா?
பைரவர், காளி போன்ற உக்கிர தெய்வங்களுக்கு நள்ளிரவு நேரத்தில் பூஜை நடத்தலாம்.
சி.ராஜேந்திரன், பெதப்பம்பட்டி, திருப்பூர்.
* துாங்கும் குழந்தைக்கு திருநீறு பூசலாமா?
ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தைக்கு மட்டும் துாங்கும் போது திருநீறு பூசலாம்.
எம்.தாமோதரன், திருத்தணி, திருவள்ளூர்.
* கோயிலில் பரிகாரத்திற்காக பூஜை செய்த பிரசாதத்தை சாப்பிடலாமா?
சுவாமியின் பிரசாதமாக இதனை நினைத்து சாப்பிடுங்கள்.
ஜி.பவானி, ராதாபுரம், திருநெல்வேலி.
*திருஷ்டி பூசணியை எத்தனை நாளில் உடைக்கலாம்?
முற்றிய காயை வாங்குங்கள். அது அழுகும் வரை உடைக்க வேண்டாம்.
கே.மோனிகா, கன்னிவாடி, திண்டுக்கல்.
*கோயில்களில் பெரியவர்களைக் கண்டால் வணங்கலாமா?
கோயிலில் தெய்வத்தை வணங்குவது போல பெரியவர்களையும் வணங்கலாம்.