Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : பிப் 18, 2020 03:11 PM


Google News
Latest Tamil News
* குபேர யந்திரத்தை வீட்டில் பூஜிக்கலாமா?

பி.மந்திரா, புதுச்சேரி

வீட்டில் யந்திரத்தை பூஜிப்பதற்கு விதிமுறைகள் உள்ளன. தகுதியான குருநாதரிடம் உபதேசம் பெற்ற பின்னரே பூஜை செய்ய வேண்டும். எனவே கோயில்களில் யந்திரம் இருந்தால் வழிபாடு செய்யுங்கள்.

* வீடு, கோயிலில் எங்கு விளக்கேற்றுவது நல்லது?

பி.ஸ்ரேயா, சென்னை

இரண்டுமே அவசியம். தினமும் காலை, மாலையில் வீட்டில் ஏற்ற வேண்டும். கோயிலில் வாரம் ஒருமுறையாவது விளக்கேற்றுவது அவசியம்.

* வைதீகச் சடங்குகளுக்கு எவர்சில்வர் பாத்திரம் பயன்படுத்தலாமா?

கே.தனுஷ், கோவை

இரும்பில் இருந்து எவர் சில்வர் தயாரிக்கப்படுவதால் பூஜைக்கு ஏற்றது அல்ல. பித்தளை, தாமிரம், வெள்ளி பாத்திரங்களே ஏற்றவை.

* குலதெய்வத்திற்கு முதல் மொட்டை செலுத்துவது ஏன்?

பி. அர்ச்சனா, மதுரை

ஆன்மிக அடிப்படையில் இதனை 'முடி காணிக்கை' என்பர். குலதெய்வத்திற்குரிய நேர்த்திக்கடன்களில் இது முதன்மையானது. குழந்தை உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழவும், குலம் தழைக்கவும் இதை செய்கின்றனர்.

அன்னதானம் செய்தால் பாவம் நீங்குமா?

டி.பரத், ஊட்டி

அறியாமல் செய்த பாவம் நீங்கும். பாவம் செய்வதற்காகவே அன்ன தானம் அளிப்பதாக இருந்தால் எந்த பலனும் கிடைக்காது.

ஸ்ரீராம ஜெயம், ஸ்ரீராம ஜயம் இரண்டில் எது சரி?

எம்.முகிலன், திருப்பூர்

சமஸ்கிருத இலக்கணப்படி ஜயம் என்பதே சரி. ஜெயம் என்பது வழக்கத்தில் உள்ளது. பல சொற்கள் இது போல் மருவியுள்ளன.

மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைப்பதில்லையே ஏன்?

எம்.ரகு, திருத்தணி

செல்வம் ஓரிடத்தில் தங்கி விட்டால் ஏழைகள் ஏழையாகவே இருப்பர். சுழற்சி இன்றி சமுதாயம் இயங்காமல் தேங்கி விடும். அதனால் தான் மகாலட்சுமி ஓடிக் கொண்டே இருக்கிறாள்.

காசிக்குப் போனவர்கள் ராமேஸ்வரம் செல்லணுமா?

எஸ்.அக் ஷயா, சிவகங்கை

காசியில் இருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அப்போது தான் யாத்திரை முழுமை பெறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us