Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஜன 23, 2020 02:58 PM


Google News
Latest Tamil News
* ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்னாகும்?

எம்.ஹாசினி, சிவகங்கை

வலது கண், தோள், தொடை துடித்தால் ஆண்களுக்கு நன்மையுண்டாகும். இதே போல பெண்களுக்கு இடது கண், தோள், தொடை துடித்தால் நல்லது. அனுமன் துாது புறப்பட்டபோது அசோகவனத்தில் இருந்த சீதையின் இடக்கண் துடித்ததாக கம்பர் குறிப்பிடுகிறார். நல்ல சகுனமான இதை அறிந்த சீதை மகிழ்ந்தாள்.

* செருப்பு அணிந்து கிரிவலம் செல்லலாமா?

பி.ஷிவானி, திருத்தணி

கூடாது. மலை வடிவில் இருக்கும் சுவாமியை சுற்றி வந்து வழிபடுவதே கிரிவலம். எனவே செருப்பு இன்றி சுற்றுவதே சரியான முறை.

* ரூபாய் நோட்டால் சுவாமிக்கு அலங்காரம் செய்வது சரிதானா?

பி.ஸ்ரீசரண், போத்தனுார்

ரூபாயை காகிதமாக எண்ணுவதால் இப்படி கேட்கிறீர்கள். பணத்தை கொடுத்தால் அதற்கு ஈடாக தங்கம், வைரம் வாங்கலாம் அல்லவா! எனவே தங்கம், வைரத்திற்கு ஒப்பானதாக பணத்தை கருதி ரூபாய் நோட்டால் அலங்கரிக்கிறோம்.

* ஆகம விதிகளை சாதாரண மக்கள் கடைபிடிக்க முடியுமா?

டி.தேஜஸ், புதுச்சேரி

ஆகமவிதி என்பது பின்பற்றுவதற்கு கடினமானது அல்ல. நல்லது, கெட்டதை பகுத்தறியும் மனிதர்களாக பிறந்த நாம் கட்டுப்பாடுடன் வாழ வேண்டும் என வழிகாட்டுவதே ஆகம விதி.

ஜாதகம், நியூமராலஜி இரண்டில் எதன் அடிப்படையில் பெயரிடுவது நல்லது?

கே.மிருத்திகா, கோவை

பெற்றோர், குடும்பத்தின் பெரியவர்கள் விரும்பும் இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சூட்டுவது தான் சரியானது.

களத்திர தோஷம் தீர யாரை வழிபடவேண்டும்?

எல்.அஸ்வதா, கடலுார்

களத்திரகாரகன் சுக்கிரன். இவரின் அதிதேவதை அம்பிகை. வெள்ளிக்கிழமைகளில் பார்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களை வழிபட்டால் களத்திர தோஷம் தீரும்.

ஒருமுறை அர்ச்சித்த வில்வம் மீண்டும் பயன்படுமா?

பி.ஹர்ஷிகா, உடுமலைப்பேட்டை

கிடைக்காத சூழ்நிலையில் வில்வம், சந்தனத்தைக் கழுவி மீண்டும் பயன்படுத்தலாம்.

மாலை 6:00 மணிக்கு மேல் துளசி பறிக்கக் கூடாதாமே?

சி.பிரபஞ்சன், தேனி

துளசியில் விஷ்ணுவும் வில்வம், கொன்றை இலையில் சிவனும் இருப்பதாகச் சொல்வர். சூரியன் மறைந்த பிறகும், சில விலக்கப்பட்ட நாட்களிலும் இவற்றைப் பறிக்கக் கூடாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us