Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஜூலை 09, 2019 11:59 AM


Google News
Latest Tamil News
வீட்டு பூஜையில் மணியடிப்பது கட்டாயமா...

வீ.பிரபா, கடலுார்

பூஜையில் மணியடிப்பது நல்லதே. தெய்வீக சக்தியை ஈர்த்து, தீயசக்தியை போக்கும் ஆற்றல் உடையது மணியோசை.

* கர்மவினை என்பதன் பொருள் என்ன?

ராஜா, மாடம்பாக்கம்

முற்பிறவிகளில் செய்த செயல் 'கர்மா' எனப்படும். இதில் நல்லதும், கெட்டதும் அடங்கும். இதன் விளைவாக பாவ, புண்ணியம் உண்டாகிறது. அதனடிப்படையில் வாழ்வில் இன்ப, துன்ப அனுபவம் ஏற்படுகிறது. இதையே 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்கிறது இலக்கியம்.

* கைக்குழந்தை உள்ள நிலையில், கணவரை இழந்த பெண் மறுமணம் செய்யலாமா?

கே.காயத்ரி, மதுரை

பெண்ணின் பாதுகாப்பு, குழந்தையின் எதிர்காலம் இவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டியுள்ளது. பாரதியாரின் கோட்பாடுகளில் கைம்பெண் மறுமணமும் ஒன்று! குடும்பத்திலுள்ள பெரியவர்கள் பெண்ணின் மனநிலை, குடும்பச்சூழலை ஏற்றுக் கொண்டு மறுவாழ்வுக்கு உதவுவது அவசியம்.

சிவ வழிபாட்டுக்கு உகந்த கிழமை எது?

எஸ்.ஸ்ரீராம், சிவகங்கை

திங்கட்கிழமையை சமஸ்கிருதத்தில் 'சோம வாரம்' என்பர். ஸ+உமா என்பது இணைந்து 'ஸோம' என்றானது. உமையவளுடன் சேர்ந்த சிவபெருமானையே 'சோமன்' என்று குறிப்பிடுவர். எனவே அவருக்குரிய திங்கட்கிழமையில் வழிபடுவது சிறப்பு. இந்நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டால் மனபலம், உடல்பலம் அதிகரிக்கும்.

மறைந்த பெற்றோருக்காக பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா?

டி.தஷின்யா, புதுச்சேரி

அமாவாசை விரதம் ஆண்களுக்கு உரியது. மாமனார், மாமியார் இல்லாதவர்கள் கணவருடன் சேர்ந்து விரதம் இருக்கலாம். மகன்கள் அல்லது உடன் பிறந்தவர்கள் செய்யும் தர்ப்பணம் போன்ற பிதுர்கடன்களால் இறந்தவர்களின் ஆன்மா திருப்தி அடையும்.



விபூதியை மூன்று கோடுகளாக இடுவது ஏன்?

எம்.விஷால், சென்னை

பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திக்கும் மேலானவர் சிவபெருமான். அவரது திருநாமத்தை ஜபித்து திருநீற்றை மூன்று கோடுகளாக நெற்றியில் இடுவதால் ஆணவம், கன்மம், மாயை நீங்கும். வீடுபேறு கிடைக்கும் என்பது தத்துவம். இதில் ஆணவம் என்பது நான் என்னும் கர்வம், கன்மம் என்பது வினைப்பயன், மாயை என்பது வாழ்வின் நிலையற்ற தன்மை.

திருமணத்திற்கு சிலர் வெற்றிலை, பாக்குடன் அழைப்பது ஏன்?

டி.கே.குமார்,குனியமுத்துார்

வெற்றிலையும், பாக்கும் சேர்ந்தால் தான் வாய் சிவக்கும். ஜீரண சக்தி அளிக்கும். இந்த பொருட்கள் இணைவதால் உடம்புக்கு நன்மை கிடைப்பது போல, மணவீட்டாருடன் உறவினர்களும் இணைந்து சுபநிகழ்ச்சியை நடத்திக் கொடுக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

கொடிமரத்தில் எந்த திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும்?

கே.இந்து, விழுப்புரம்

தெய்வ அருள் மிக்க வடக்குத் திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும்.

பிறவி தொடராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கே.அனுசுயா, திருவொற்றியூர்

ஆசை இருக்கும் வரை பிறவி தொடரவே செய்யும். அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையில் மறுபிறவி அமைகிறது. 'எல்லாம் அவன் செயல்' என்று கடவுளைச் சரணடைந்தால் பிறப்பற்ற நிலை ஏற்படும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us