Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஏப் 19, 2019 02:48 PM


Google News
Latest Tamil News
மலைக் கோயில்களின் மகத்துவம் என்ன?

என்.எம். சுப்பிரமணி, சென்னை

இயற்கையாகவே அபூர்வ சக்தி கொண்டவை மலைகள். அதன் மீது கோயில்கள் இருந்தால் அதன் சக்தி பன்மடங்கு பெருகும். திருப்பதி, திருவண்ணாமலை, பழநி போன்ற தலங்கள் விசேஷமாக இருப்பது இதனால் தான்.

முருகனுக்கு எத்தனை பெயர்கள் உள்ளன?

கா.வடிவேல் முருகானந்தம், விருதுநகர்

ஆகம சாஸ்திரத்தில் 16 பெயர்கள் உள்ளன. சிற்ப சாஸ்திரத்தில் இன்னும் பல பெயர்கள் கூறப்பட்டுள்ளன. 108 பெயர்கள் அஷ்டோத்திரத்திலும், 1,008 பெயர்கள் சகஸ்ர நாமத்திலும் உள்ளன. எத்தனை இருந்தாலும் அழகு தமிழில் வாய் நிறைய 'முருகா' என ஒருமுறை அழைத்தால் போதும்.

கனகாபிஷேகம் என்பது என்ன? யாருக்கு செய்யலாம்?

எஸ்.அமிர்தவல்லி, திருப்பூர்

தங்கக்காசுகளால் செய்யும் அபிஷேகம் கனகாபிேஷகம். கோயில் திருவிழாக்களில் உற்ஸவர்களுக்கு நடத்துவர். மற்றபடி 80 வயதை அடைந்தவர்கள், கொள்ளுப்பேரன் உள்ளவர்கள், ஆயிரம் பிறைகள் கண்ட பெரியவர்களுக்கு இதைச் செய்வது சிறப்பு.

* கண்அறுவை சிகிச்சைக்கு என்ன நேர்த்திக்கடன் செய்யலாம்?

ஆர்.நிரஞ்சனா ஊரப்பாக்கம்

வெள்ளி அல்லது தங்கத்தால் செய்த கண்மலரை காணிக்கை செலுத்துவதாக குலதெய்வம் (அ) மாரியம்மனுக்கு வேண்டுங்கள். அதற்காக மஞ்சள் துணியில் ஐந்து ரூபாய் நாணயத்தை காணிக்கை வையுங்கள். குணம் அடைந்த பின் கண்மலர், காணிக்கையை கோயிலில் செலுத்தி விட்டு மாவிளக்கு ஏற்றி வழிபடுங்கள்.

* விநாயகருக்கு உடைக்கும் சிதறுகாயை யார் சாப்பிடலாம்?

பி.பரத், சிதம்பரம்

இதுவும் பிரசாதம் தான். சிறுவர்கள் சாப்பிடுவது சிறப்பு. ஆனால் இதை யார் சாப்பிட்டாலும் அவர்களுக்கு விநாயகர் அருள் துணைநிற்கும்.

கரிநாளில் சுபநிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது ஏன்?

கே.குமரேசன், விழுப்புரம்

பெயரிலேயே 'கரி' உள்ளதே! சூரியனின் சுழற்சியில் முழுமையான ஒளி பெறாத நாள் 'கரிநாள்'. இந்த நாட்களில் சூரியனின் பலம் குறைவதால் சுபநிகழ்ச்சிகளை தவிர்ப்பது அவசியம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us