Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஏப் 13, 2019 09:54 AM


Google News
Latest Tamil News
வெள்ளை எருக்கு வேரில் விநாயகரை வழிபடுவது ஏன்?

எம்.தர்ஷணி, சாத்துார்

சிற்பியால் செதுக்கப்படாமல் இயற்கையாகத் தோன்றும் தெய்வ வடிவங்களுக்கு சக்தி அதிகம். தானாக தோன்றும் இதனை 'தான்தோன்றீஸ்வரர் (அ) சுயம்பு' என்பர். விநாயகருக்கு உரிய வெள்ளை எருக்கம் செடியின் வேரில் இயற்கையாகவே அவரது வடிவம் ஏற்படுவதுண்டு. இவரை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

* மந்திரம் சமஸ்கிருதத்தில் இருப்பது எதனால்?

ஆர்.பூஜாஸ்ரீ, கோவை

மந்திரம் என்ற சொல்லே சமஸ்கிருதம் தான். அட்சரங்களை (அ) எழுத்துக்களை அதற்குரிய உச்சரிப்புடன் சொல்வதால் எழும் ஒலி அதிர்வுகள், நற்பலனை தருகின்றன. எனவே மந்திரத்தை அப்படியே சொல்வது நல்லது. குறிப்பிட்ட மதம், ஜாதிக்கு சொந்தமானது அல்ல சமஸ்கிருதம். எவருக்கும் தாய்மொழியும் அல்ல.

* ஏகாதசியன்று சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

ப.சாவித்திரி, குறிஞ்சிப்பாடி

ஏகாதசி, சதுர்த்தி போன்ற விரத நாட்களில் முகூர்த்தம் அமைவது இயற்கை. இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம். விரதமிருப்பவர் சுபநிகழ்ச்சிகளில் உண்பதை தவிர்க்கலாம்.

வீட்டில் இருக்கும் காசி தீர்த்தத்தை என்ன செய்யலாம்?

என்.ஜே.ரவி விக்னேஷ். திருப்பூர்

புனிதமான காசி தீர்த்தம் பூஜையறையில் இருப்பது சிறப்பு. ஒரு செம்புக்கும் அதிகமாக தீர்த்தம் இருப்பின், கும்பாபிஷேகம், சுவாமி அபிஷேகத்திற்கு கொடுத்தால் கிரகதோஷம், முன்வினை பாவம் அகலும்.

கொசுவை கொன்றால் பாவம் தானே...

அ.காயத்ரிதேவி, திருவொற்றியூர்.

பாவம் தான். நெல், காய்கறிகள், பழங்கள் போன்றவை முளைப்பு திறன் கொண்டதால் உயிருள்ளவை தான். ஆனால் நாம் உயிர் வாழ சாப்பிடுவது அவசியம். இதே போல ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஈ, கொசு போன்ற பூச்சிகள், கிருமிகளைக் கொல்வதை தவிர்க்க இயலாது. இதற்கு பரிகாரமாக குளிக்கும் முன் கங்காதேவியை பிரார்த்தித்தால் இந்த பாவம் அகலும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us