Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/யாருக்கு குபேர யோகம்

யாருக்கு குபேர யோகம்

யாருக்கு குபேர யோகம்

யாருக்கு குபேர யோகம்

ADDED : மே 10, 2024 12:37 PM


Google News
Latest Tamil News
எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் தங்குவதில்லை என புலம்புகிறீர்களா... புலம்பல் தீர இதை பின்பற்றுங்கள்.

* பெற்றோர்களை வணங்குங்கள்

* பெண்களை அழ விடாதீர்கள்.

* வீட்டை துாய்மையாக வையுங்கள்.

* வீண் பேச்சு பேசாதீர்கள்.

* பணம் வைக்கும் இடத்தை அடிக்கடி மாற்றாதீர்கள்.

* பணத்தை கையாளும் போது அவசரப்படாதீர்கள்.

* பணத்தை எச்சில் தொட்டு எண்ணாதீர்கள்.

* சில்லறைகளை சிதற விடாதீர்கள்.

* ரூபாய் நோட்டை கசக்கவோ எழுதவோ வேண்டாம்.

* ரூபாய் நோட்டை வரிசையாக அடுக்கி வையுங்கள்.

* மணிபர்சை முன்பையில் வையுங்கள்.

* பணம் சேமிக்கும் உண்டியலை அடிக்கடி எடுத்து குலுக்கி பார்க்காதீர்.

* விருந்தினரை உபசரியுங்கள்

* பணம் பற்றி பேசினால் முரணாக பேசாதீர்.

* ஒருவருக்கு பணம் கொடுக்கும் போது, 'என்னால் தான் இவனுக்கு வாழ்வு வந்தது' என ஆணவம் கொள்ளாதீர்கள்.

* நேரம் பார்க்காமல் உதவி செய்யுங்கள்.

* முடிந்தவரை அன்னதானம் செய்யுங்கள்.

* குருஹோரையில் பணத்தை புழங்குங்கள். (வியாழன் காலை 6:00 - 7:00, மதியம் 1:00 - 2:00, இரவு 8:00 - 9:00) பணம் கையை விட்டு போனாலும் திரும்ப உங்களிடமே வந்து விடும்.

* கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி, இடரினும் தளரினும்... போன்ற பதிகங்களை தினமும் கேளுங்கள்.

* அம்பிகையின் சன்னதியில் உங்கள் பிரார்த்தனைகளை வாய்விட்டு சொல்லுங்கள். அவளின் கடைக்கண் பார்வை கிடைக்கும்.

* நீங்கள் அழைக்காமலே உங்க வீட்டுக்கு குபேரன் வந்து அருள்புரிவார்.

* சுவாமி படத்தை துடைத்து பூ வையுங்கள்.

* பீரோவை வடகிழக்கு திசை பார்த்து வையுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us