Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : மார் 08, 2024 01:56 PM


Google News
Latest Tamil News
* திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய திருமுறைகளின் தொகுப்பு தேவாரம்.

* தமிழகத்தில் இருக்கும் ஒரே ஜோதிர்லிங்கத்தலம் ராமேஸ்வரம்.

* பஞ்சாட்சரம் என்பது 'ஐந்தெழுந்து மந்திரம்'.

* படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தொழிலுக்கும் அதிபதி சிவபெருமான்.

* 'சிவன்' என்றால் 'மங்கலம் தருபவர்'.

* 'அப்பா(சிவன்) நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும். ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு காட்டவேண்டும்' என வேண்டுகிறார் வள்ளலார்.

* சிவபெருமானைத் தரிசிப்பதற்கு அனுமதி அளிப்பவர் நந்தீஸ்வரர்.

* பக்தன் மார்க்கண்டேயரின் உயிரைப் பறிக்க வந்த எமனைக் காலால் எட்டி உதைத்தவர் சிவபெருமான்.

* நெஞ்சுவிடு துாது என்னும் சைவ சாஸ்திர நுாலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார்.

* தண்ணீரால் சிவனுக்கு விளக்கு ஏற்றியவர் நமிநந்தியடிகள்.

* பன்னிரு திருமுறைகளில் சுந்தரரின் தேவாரத்தை 'திருப்பாட்டு' எனக் குறிப்பிடுவர்.

* இலங்கையிலுள்ள இரண்டு தேவாரத் தலங்கள் திரிகோணமலை, திருகேதீச்சரம்.

* மயில் வடிவில் சிவனை வழிபட்ட அம்பிகை மயிலாப்பூர் கற்பகாம்பாள்.

* திருநாவுக்கரசர் கைலாய காட்சி பெற்ற சிவத்தலம் திருவையாறு ஐயாறப்பர் கோயில்.

* பூலோக கைலாயம் என போற்றப்படும் தலம் சிதம்பரம் நடராஜர் கோயில்.

* ஆடும், யானையும் சிவபூஜை செய்த தலம் திருவாடானை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us