Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : ஜன 26, 2024 07:28 AM


Google News
Latest Tamil News
சி.நிவேதா, கனகபுரா, பெங்களூரு.

*தேச பக்தியா... தெய்வ பக்தியா... - எது அவசியம்?

தேச பக்தி இல்லாத தெய்வ பக்தி வீணானது. நாடு, மக்கள் நலம் பெற பிரார்த்திப்பது நம் கடமை.

எல்.காயத்ரி, சுசீந்திரம், கன்னியாகுமரி.

*கிருஷ்ணர் 'மாதங்களில் நான் மார்கழி' என்கிறாரே...

அதிகாலை வழிபாட்டுக்கு ஏற்றது மார்கழி. அதை பீடுடைய (சிறப்பு மிக்க) மாதம் என்பர். இதனால் கிருஷ்ணர் மார்கழியை போற்றுகிறார்.

எம்.நளினி, மதுராந்தகம், செங்கல்பட்டு.

*கற்பூரம், பச்சைக்கற்பூரம் - பூஜைக்கு ஏற்றது எது?

கலப்படம் இல்லாத பச்சைக்கற்பூரம் பூஜைக்கும், சமையலுக்கும் ஏற்றது. கற்பூரம், சூடத்தில் புகை அதிகம் வருவதால் அதை தவிர்ப்பது நல்லது.

கே.அசோக், நெய்வேலி, கடலுார்.

*பிரிந்த உறவினரை சந்திக்க நாள் பார்க்கணுமா?

நாள், நட்சத்திரம் பார்ப்பது அவசியம்.

வி.ஆகாஷ், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி.

*உடையவர் இல்லை என்றால் ஒருமுழம் கட்டை என்கிறார்களே...

கண்டிப்புடன் வேலையை முடித்திட உரிய நபர் இல்லாவிட்டால் பணியில் தாமதம் ஏற்படும்.

பி.மைதிலி, ஜல்விகார், டில்லி.

*நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் வெற்றிலை, பாக்கு தட்டை மாற்றுவது ஏன்?

நிச்சயதார்த்தம் என்பதற்கு 'உறுதி செய்வது' என பொருள். வெற்றிலை, பாக்கு கொடுத்து, 'ஒரு விஷயத்தை செய்கிறேன்' எனச் சொன்னால் அதை மீறக் கூடாது.

எஸ்.தர்ஷினி, மல்லாங்கிணறு, விருதுநகர்.

*கல்விக்கும், கடவுளின் அருளுக்கும் தொடர்புண்டா...

கடவுள் அருள் பெற வழிகாட்டுபவர் குருநாதர்(ஆசிரியர்). அவர் இல்லாமல் கற்க முடியாது. கடவுளை அறிவதே கல்வியின் நோக்கம்.

எஸ்.விந்தியா, அவினாசி, திருப்பூர்.

*குழந்தைகள் ஒழுக்கமுடன் வாழ...

அவ்வையாரின் ஆத்திச்சூடியை படி. ஒழுக்கமுடன் வாழ். வெற்றி கிடைக்கும்.

ஆர்.சிவக்குமார், பெரியகுளம், தேனி.

*தெரியாமல் பாவம் செய்தாலும் தண்டனை இப்பிறவியிலேயே கிடைக்குமா?

தெரியாமல் செய்த பாவத்திற்கு தண்டனை கிடையாது. திருஞானசம்பந்தர் பாடிய திருநெடுங்களம் பதிகத்தை தினமும் பாடுங்கள்.

எம்.வினிதா, திருத்தணி, திருவள்ளூர்.

*சுபநிகழ்ச்சிகளில் வாழை மரம் கட்டுகிறார்களே...ஏன்?

வாழை மரம் மங்கலத்தின் அடையாளம். வாழையடி வாழையாக குலம் தழைக்க வேண்டும் என இதை திருமணத்தில் கட்டுவர். திருவிழாக்களில் மக்கள் நெரிசலால் நோய்த்தொற்று ஏற்படலாம். இதை வாழை மரம் தடுக்கிறது. கரியமில வாயுவை ஏற்று பிராண வாயுவை அதிகரிக்கச் செய்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us