Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கோயில்களில் தைப்பூசம்

கோயில்களில் தைப்பூசம்

கோயில்களில் தைப்பூசம்

கோயில்களில் தைப்பூசம்

ADDED : ஜன 19, 2024 01:36 PM


Google News
Latest Tamil News
தை மாதத்தில் வரும் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசமாக கொண்டாடுகிறோம். பழங்காலத்தில் இந்நாளில் தீர்த்தங்களில் நீராடியுள்ளனர். இந்நாளில் சிவபெருமான், முருகன் கோயில்களில் வழிபாடுகள் நடக்கும். புராணங்களில் இந்நாளன்று நடந்த நிகழ்ச்சிகள்.

* உலகம் தோன்றிய இந்நாளில் முதலில் தண்ணீரே படைக்கப்பட்டது. இதனால்தான் இன்றும் கோயில்களில் தெப்ப உற்ஸவம் நடக்கிறது.

* பதஞ்சலி முனிவரின் வேண்டுகோளின்படி உமாதேவியுடன் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார்.

* பழநி தண்டாயுதபாணி சுவாமிக்கு காவடி எடுத்தும் பாத யாத்திரை செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

* வடலுார் வள்ளலார் இந்நாளன்று ஜோதி ரூபமாய் கடவுளுடன் இரண்டறக் கலந்தார்.

* சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் வேலாயுதத்தை தன் அம்மா சக்திதேவியிடம் வாங்கினார்.

* தாமிரபரணி கரையில் தவமிருந்த காந்திமதி அம்மனுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்.

* வைணவத்தலங்களில் திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us