Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

ADDED : டிச 22, 2023 05:05 PM


Google News
Latest Tamil News
டிச.22 மார்கழி 6: திருக்குற்றாலம் குற்றால நாதர் பஞ்சமூர்த்திகளுடன் தேர். திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவக்காட்சி. கரிநாள்.

டிச.23 மார்கழி 7: வைகுண்ட ஏகாதசி. சகல விஷ்ணு கோயில்களில் பரமபதவாசல் திறப்பு. காஞ்சிபுரம் பச்சைவண்ணன், பவளவண்ணன் கருடன் வாகனத்தில் காட்சி. ஆவுடையார் கோயில் மாணிக்கவாசகர் காலை ருத்திராக்க விமானத்தில் புறப்பாடு.

டிச.24 மார்கழி 8: பிரதோஷம். சகல சிவன் கோயில்களிலும் மாலையில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு. திருநெல்வேலி, சங்கரன்கோவில், வீரவநல்லுார், திருக்குற்றாலம் தலங்களில் சிவபெருமான் வீதியுலா. கார்த்திகை விரதம்.

டிச.25 மார்கழி 9: ஆவுடையார்கோவில் தேர். மதுரை கூடலழகர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் இத்தலங்களில் இராப்பத்து உற்ஸவ சேவை.

டிச.26 மார்கழி 10: பவுர்ணமி. சகல சிவன் கோயில்களிலும் நடராஜருக்கு அபிேஷகம். சோலைமலை கள்ளழகர், திருமோகூர் காளமேகப்பெருமாள் தலங்களில் இராப்பத்து உற்ஸவசேவை.

டிச.27 மார்கழி 11: சிதம்பரம், திருவாலங்காடு, குற்றாலம், மதுரை, திருநெல்வேலி தலங்களில் ஆனந்த தாண்டவ ஆருத்ரா தரிசனம்.கரிநாள்.

டிச.28 மார்கழி 12: பரசுராம ஜெயந்தி. ஸ்ரீரங்கம் நம்பெருமான், குடந்தை சாரங்கபாணி தலங்களில் இராப்பத்து உற்ஸவ சேவை. பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us