Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

ADDED : நவ 17, 2023 01:24 PM


Google News
* வீடுகள்தோறும் காலை, மாலையில் கேட்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை.

* குழந்தைகளுக்கு அறிவுரைகளை கூறுபவர் தந்தை. அந்த தந்தையே தன் குழந்தையிடம் உபதேசம் பெற்றால் எப்படி இருக்கும். ஆம். முருகப்பெருமான் குருநாதராக சிவபெருமானுக்கு உபதேசித்த தலம் சுவாமிமலை.

* திருச்செந்துார் கோயிலில் ஆதிசங்கரர் சுப்ரமண்ய புஜங்கம் பாடினார்.

* முருகனின் நாமத்தை எப்போதும் ஜபித்துக்கொண்டிருந்த பெண் அடியவர்தான் முருகம்மையார்.

* சித்தர்கள் வாழும் மலை, மூலிகைகள் நிறைந்த மலை என சிறப்புகளை கொண்ட தலம்தான் பழநி. இதனால்தான் இத்தலம் 'சித்தன் வாழ்வு' என குறிப்பிடப்படுகிறது.

* ராமேஸ்வரத்தில் பிறந்தவர்தான் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். இவர் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார்.

* திருப்புகழை பாடிய அருணகிரிநாதர் முருகப்பெருமானை வணங்க தனக்கு 4000 கண்கள் என வேண்டும் என பிரார்த்தித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us