Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : மே 01, 2025 01:49 PM


Google News
Latest Tamil News
 கு.துவாரகேஷ், அவிநாசி, கோயம்புத்துார்: பயம் தீர...

சர்வ ஸ்வரூபே சர்வேசி சர்வ சக்தி சமன்விதே!

பயேப்ய ஸ்த்ராஹினோ தேவி துர்க்கே தேவி நமோஸ்துதே!!

இதை தினமும் சொல்லி துர்கையை வழிபடுங்கள்.

ஆர்.ஆனந்த், எட்டையபுரம், துாத்துக்குடி: இதயக்கோயில் எங்குள்ளது?

சிவபக்தரான பூசலார் இக்கோயிலை திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் கட்டினார். சுவாமியின் பெயர் இருதயாலீஸ்வரர்.

வி.மாரி, நத்தம், திண்டுக்கல்: சித்தர்கள் கோயில்களை தரிசித்தால்...

அறியாமை அகலும்; மனஅமைதி கிடைக்கும்.

டி.காவ்யா, இருக்கன்குடி, விருதுநகர்: முன்னோர் கட்டிய கோயிலை பராமரிக்காவிட்டால்...

பாவம் சேரும். முன்னோர் கொடுத்ததே இந்த வாழ்க்கை. அவர்கள் கட்டிய கோயிலை பராமரிப்பது உங்களின் கடமை.

மு.அமராவதி, வடிவீஸ்வரம், கன்னியாகுமரி: உக்கிர தெய்வத்தை வழிபடலாமா...

கோயிலில் வழிபடலாம். வீட்டில் வேண்டாம்.

பே.புஷ்பராணி, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: கிராம தெய்வத்திற்கு எத்தனை நாள் திருவிழா நடத்தலாம்?

ஒற்றைப்படை எண்ணில் (1, 3, 5, 7...) இருப்பது அவசியம்.

ரா.பூரணி, ஆவடி, திருவள்ளுர்: தாயார் செய்ய வேண்டிய நேர்ச்சையை மகன் நிறைவேற்றலாமா?

நிறைவேற்றலாம். தாயின் ஆசியும், கடவுளின் அருளும் கிடைக்கும்.

கா.ராஜேஸ்வரி, பசவன்குடி, பெங்களூரு: எருக்கம்பூவை சிவனுக்கு சாத்தலாமா...

சாத்துவது விசேஷம். சிவனுக்குரிய பூக்களில் இதுவும் ஒன்று.

யு.ஆர்த்தி, ஏரோசிட்டி, டில்லி: காணிக்கையை மற்றவர் மூலம் கோயிலுக்கு கொடுத்து அனுப்பலாமா?

தவிர்க்க முடியாத சூழலில் மற்றவர் மூலம் கொடுத்தனுப்பலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us