Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : ஏப் 17, 2025 11:54 AM


Google News
Latest Tamil News
ஆ.சிவா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: வீட்டில் ஒருவர் துாங்கும் போது, விளக்கேற்றலாமா?

விளக்கேற்றும் நேரத்தில் துாங்கக் கூடாது.

கு.பரசுராம், திருமங்கலம், மதுரை: தினசரி எத்தனை மணி நேரம் ஜபம் செய்யலாம்?

நேரம் கிடைக்கும் போதெல்லாம்...

பி.ராஜாராம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி: எந்த நேரத்தில் எந்த ஸ்தோத்திரம் சொல்லலாம்?

காலை - விநாயகர், சிவன், சூரியன்.

மதியம் - விஷ்ணு

மாலை - முருகன், மகாலட்சுமி, அம்மன்.

யா.அருள், எல்.ஆர்.பாளையம், புதுச்சேரி: துளசி மாலையில் வெள்ளிப்பூண் சேர்க்கலாமா?

சக்தி பெருக இதை சேர்க்கலாம்.

போ.மகேஷ், பழநி, திண்டுக்கல்: மாலையில் அரச மரத்தை சுற்றலாமா...

சூரியன் மறைவதற்குள் சுற்றுங்கள்.

தி.போஸ், குளச்சல், கன்னியாகுமரி: இனிப்பு, உப்பு இதில் முதலில் எதை பரிமாற வேண்டும்?

இனிப்பு பரிமாறுவது சிறந்தது.

வி.அமராவதி, மருதமலை, கோயம்புத்துார்: விளக்கேற்றும் போது பின்வாசலை சாத்துவது ஏன்?

வீட்டில் விளக்கேற்றியதும் மகாலட்சுமி அங்கு வருகிறாள். அவளின் அருள் மேலும் பெருக பின்வாசலை சாத்துகிறோம்.

மு.ராதிகா, எழும்பூர், சென்னை: துளசி கலந்த நீரை காய்ச்சி குடிக்கலாமா?

குடிக்கலாம். உடல்நலத்துடன் புண்ணியமும் கிடைக்கும்.

எம்.ரம்யா, கல்யாண்புரி, டில்லி: துறவிகளின் சன்னதிக்கு எப்படி செல்ல வேண்டும்?

துறவி, குருநாதர், குழந்தையை பார்க்க பூ, பழத்துடன் செல்ல வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us