Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : மார் 06, 2025 02:54 PM


Google News
Latest Tamil News
ம.பூஜா, சிங்காநல்லுார், கோயம்புத்துார்: சனீஸ்வரர் கெட்டவரா...

இல்லை. கெடுப்பதிலும், கொடுப்பதிலும் அவருக்கு நிகர் யாரும் இல்லை.

வா.மணி, கோடம்பாக்கம், சென்னை: காலசர்ப்ப தோஷம் என்றால்...

பிறந்த லக்னம், கிரகங்கள் அனைத்தும் ராகு, கேதுவின் பிடிக்குள் இருப்பது.

ரா.அம்பிகா, பழநி, திண்டுக்கல்: ஹோரை என்றால் என்ன?

தினமும் தலா ஒரு மணி நேரம் ஏழு கிரகங்கள் ஆட்சி செய்யும். (ராகு, கேது தவிர) இதுவே ஹோரை.

வெ.ராஜாராம், நொய்டா, டில்லி: திருப்பதி சென்றால் திருப்பம் வருமா?

ஏழுமலையான் அருளால் திருப்பம் வரும்.

தி.செல்வி, குருந்தன்கோடு, கன்னியாகுமரி: வெளிநாட்டு வேலைக்கு செல்ல யாரை வழிபடலாம்?

சனிக்கிழமை தோறும் அனுமனை வழிபடுங்கள்.

பா.ஸ்ரீநிதி, காரைக்குடி, சிவகங்கை: மாதவிலக்கின் போது துளசி மாடத்தை சுற்றலாமா?

தீட்டு முடிந்து தலைக்கு குளித்தபின் துளசிமாடத்தை சுற்றலாம்.

சொ.சிவா, மணிமுத்தாறு, திருநெல்வேலி: குருநாதரின் அருள் கிடைக்க...

குருநாதரை வணங்கி சேவை செய்தால் போதும்.

தா.பரிமளா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: தனக்கு மிஞ்சித்தான் தானம் என்றால்...

தனக்கும், குடும்பத்தினருக்கும் செலவழித்தது போக மிஞ்சியதை தானம் செய்தால் போதும்.

கு.கல்யாண், திருநாவலுார், விழுப்புரம்: ஹோமத்தில் இட்ட நாணயத்தை செலவழிக்கலாமா...

கூடாது. பணப்பெட்டியில் வையுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us