Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : பிப் 05, 2025 01:18 PM


Google News
Latest Tamil News
எஸ்.ராமையா, தக்கலை, கன்னியாகுமரி: காமதேனுவை வீட்டில் வழிபட்டால்...

மிக நல்லது. தினமும் கோபூஜை செய்த புண்ணியம் பெறுவீர்கள்.

சி.சங்கரி, ஜூஜூவாடி, பெங்களூரு: விநாயகருக்குரிய தேங்காய் மாலையில் எத்தனை தேங்காய் இருக்க வேண்டும்?

விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவிக்க வேண்டாம். அருகம்புல், பூமாலைகளே ஏற்றவை.

கி.பாலமுரளி, வண்டலுார், காஞ்சிபுரம்: பிறந்த நட்சத்திரத்தன்று என்ன செய்யலாம்?

கோயில் வழிபாடு, அன்னதானம் செய்யலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடத்தக் கூடாது.

எம்.சிவா, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: பணநெருக்கடியால் அவதிப்படுகிறேன். வழி சொல்லுங்கள்.

சூரியன் உதிக்கும், மறையும் நேரத்தில் துாங்காதீர்கள். விளக்கேற்றி மகாலட்சுமியை வழிபடுங்கள்.

தி.சியாமளா, கீர்த்திநகர், டில்லி: மஞ்சள் கயிற்றை எந்த நாளில் மாற்றக் கூடாது?

செவ்வாய், சனிக்கிழமைகள், பிரதமை, அஷ்டமி, நவமி திதிகளில் மாற்றக் கூடாது.

அ.பர்வதவர்த்தினி, உழவர்கரை, புதுச்சேரி: பாதியில் நின்றுபோன விரதத்திற்கு பரிகாரம் உண்டா...

பரிகாரம் தேவையில்லை. சூழ்நிலை மாறியதும் மீண்டும் விரதத்தை தொடருங்கள்.

பா.மஹதி, மருதமலை, கோயம்புத்துார்: தேசபக்தி என நாட்டுப்பற்றை ஆன்மிக ரீதியாகச் சொல்வது ஏன்?

நாடும், தெய்வமும் ஒன்று என்பதால் தேசபக்தி, தெய்வபக்தி என்கிறோம்.

வி.ராஜஸ்ரீ, சத்திரப்பட்டி, விருதுநகர்: வீட்டில் எளிமையாக பூஜை செய்வது எப்படி?

விளக்கேற்றி சுவாமி படங்களுக்கு பூ சாத்துங்கள். மணி ஓசையுடன் பால், பழங்கள் வைத்து தீபாராதனை காட்டுங்கள்.

ரா.ரேவதி, பசுவந்தனை, துாத்துக்குடி: அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமா?

அதிகாலையில் கண் விழித்து கடமையாற்றினால் நிச்சயம் பலிக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us