Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : ஜன 30, 2025 12:40 PM


Google News
Latest Tamil News
ரா.காமேஸ்வரன், கருநாகப்பள்ளி, கன்னியாகுமரி: வியாபார வளர்ச்சிக்கு...

பணிவும், நேர்மையும், அக்கறையும் இருக்க வேண்டும். மேலும் வெள்ளியன்று மகாலட்சுமியை வழிபடுங்கள்.

இ.மாளவிகா, காடுகோடி, பெங்களூரு: பசு வழிபட்ட சிவத் தலங்கள்....

திருவாவடுதுறை (மயிலாடுதுறை), திருக்கோகர்ணம் (புதுக்கோட்டை), பேரூர் (கோவை)

எம்.திலக், ஆண்டிப்பட்டி, தேனி: யானை முடி மோதிரம் அணிவது ஏன்?

திருஷ்டியில் இருந்து விடுபட இதை அணிகிறோம்.

வ.சிதம்பரம், தேவிப்பட்டினம், ராமநாதபுரம்: திருமணத்தை தள்ளிப் போடுகிறார்களே...

இளைஞர்களின் எதிர்பார்ப்பு, பொருளாதாரம், கலாசார சீரழிவு போன்றவை இதற்கு காரணம்.

ம.பன்னீர்செல்வம், தளி, திருப்பூர்: சஷ்டியப்த பூர்த்தி(60) தம்பதியருக்கு கனகாபிஷேகம் செய்யலாமா?

செய்யக் கூடாது. 100 வயதில் தான் கனகாபிஷேகம் செய்ய வேண்டும்.

குரு.யாழினி, மேல்மலையனுார், விழுப்புரம்: விரதம் இருப்பவர்கள் உப்பு சேர்க்கலாமா?

உப்பு இல்லாமல் சாப்பிட்டால் முடியாத செயலும் நடக்கும்.

ரா.ஆதர்ஷினி, பெருமாள்புரம், திருநெல்வேலி: வீடு கட்டுவதில் தடை ஏற்பட்டால்...

நன்றுடையானை தீயதிலானை...' எனத் தொடங்கும் சம்பந்தர் பாடிய தேவாரத்தை தினமும் பாடுங்கள்.

பி.ரகு, வண்டலுார், செங்கல்பட்டு: வழக்கு பிரச்னை தீர பைரவரை வழிபடலாமா...

வழிபடலாம். தேய்பிறை அஷ்டமி அன்றும், ஞாயிறு அன்று ராகு காலத்திலும் விளக்கேற்றுங்கள்.

க.காந்தி, மாடன்டவுன், டில்லி: பூர்வீகச் சொத்து பிரச்னைக்கு...

ஞாயிறு அன்று ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us