Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

ADDED : அக் 29, 2024 12:21 PM


Google News
Latest Tamil News
ம.அம்பிகா, நாகர்கோவில், கன்னியாகுமரி.

*முருகனுக்கு பாலாபிஷேகம் தினமும் செய்யலாமா?

முருகனுக்கு விருப்பமான இதை தினமும் செய்யலாம்.

எம்.வேல்முருகன், முக்கூடல், திருநெல்வேலி.

*சஷ்டி விரதத்தை ஆண்டு முழுவதும் பின்பற்றலாமா?

கந்தசஷ்டி விரதம் இருப்பதோடு மாதந்தோறும் வளர்பிறை சஷ்டியில் விரதம் இருங்கள்.

பி.ரமணி, பூம்பாறை, திண்டுக்கல்.

*பன்னீர் இலை விபூதி பூசினால்...

திருச்செந்துார் முருகனின் பிரசாதம் பன்னீர் இலை விபூதி. அதை பூசினால் நோய் தீரும்.

ரா.சுந்தர், அலங்காநல்லுார், மதுரை.

*ஓம் என்னும் மந்திரத்தை மட்டும் சொல்லலாமா?

சொல்லலாம். அதிகாலையில் சொன்னால் முருகன் அருள் கிடைக்கும்.

கே.ராகவி, ராமமூர்த்தி நகர், பெங்களூரு.

*வேலும் மயிலும் துணை என சொல்வது ஏன்?

மயில் சரணாகதியையும், வேல் வெற்றியையும் குறிக்கும். நாமும் முருகனை சரணடைந்தால் நலமுடன் வாழலாம்.

எம்.சந்தோஷ், திருவான்மியூர், சென்னை.

*லட்சுமி கடாட்சம் தரும் திருப்புகழ் எது?

சரண கமலாலயத்தை எனத் தொடங்கும் திருப்புகழை பாடுங்கள்.

ஏ.நாகராஜன், சமத்துார், பொள்ளாச்சி.

*முருகப்பெருமான் சிவபூஜை செய்கிறாரே...ஏன்?

சூரபத்மனை கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்கிறார்.

கே. வைஷ்ணவி, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்.

*சில கோயில்களில் வேலிற்கு மட்டும் பூஜை நடக்கிறதே...

முருகனும் வேலும் வேறு வேறு அல்ல. அதனால் வேலுக்கும் பூஜை நடக்கிறது.

ஆ. பரிமளா, வசந்த்விகார், டில்லி.

*செவ்வாய் தோஷம் தீர...

செவ்வாய்தோறும் முருகனுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் பாடுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us